டெல்லி: நாட்டின் தலைநகர் டெல்லியில் மீண்டும் கிடுகிடுவென உயர்ந்து வரும் கொரோனா தொற்று பாதிப்பு காரணமாக, மீண்டும் விமானம், ரயில் போக்குவரத்து நிறுத்தப்பட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

டெல்லியில் கொரோனா வைரஸ்  தொற்று பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 5 லட்சத்தை தாண்டியது. அதுபோல கடந்த இரு நாட்களுஙககு இல்லாத அளவுக்கு ஒரே நாளில் 131 பேர் பலியானார்கள் இது பொதுமக்களிடையே அச்சத்தைஏற்படுத்தி உள்ளது.  கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் இணைந்து செயலாற்றி வருகின்றன. அங்கு தொற்று பாதிப்பின் 3வது அலை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

கடந்த 24 மணி நேரத்தில் டெல்லியில் 7546 பேருக்கு புதிதாக தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. அதுபோல மேலும்  98 பேர் பலியாகி உள்ளனர்.  இதனால், பொதுமக்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன.  திருமண விழாவில் குறிப்பிட்ட எண்ணிக்கையில்தான் கலந்து கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. பொதுஇடங்களில் மாஸ்க் அணியாவிட்டால் ரூ.2ஆயிரம் அபராதம் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

டெல்லிக்கு பயணம் மேற்கொள்வதை தவிர்க்குமாறு அரியானா அரசு தன் மாநில மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.

இநத நிலையில், மற்ற இடங்களுக்கும் தொற்று பரவலை தடுக்கும் வகையில், டெல்லி வரும் மற்றும் புறப்படும் விமானம், ரயில் போக்குவரத்தை மீண்டும்  நிறுத்தலாமா என்பது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.