புதுடெல்லி:
கொரோனா பரவல் எதிரொலியாக டெல்லியில் திருமணம் மற்றும் இறப்பு நிகழ்வுகளில் பங்கேற்க கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.
திருமண நிகழ்வுகளில் 100 முதல் 200 பேர் மற்றும் இறப்பு நிகழ்வுகளில் 50 பேர் மட்டுமே பங்கேற்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கொரோனா பரவல் காரணமாக மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து டெல்லி பேரிடர் மேலாண்மை ஆணையம் (டி.டி.எம்.ஏ) வெளியிட்டுள்ள அறிக்கையில், திறந்தவெளி அரங்குகளில் ஏற்பாடு செய்யப்படும் திருமணங்கள் மற்றும் பிற நிகழ்வுகளில் 200 க்கும் மேற்பட்ட விருந்தினர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்றும், நகரத்தில் 100 பேர் மூடப்பட்ட இடங்களுக்கு அனுமதிக்கப்படுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இறுதிச் சடங்குகளில் கலந்து கொள்ள அதிகபட்சம் 50 பேர் அனுமதிக்கப்படுவார்கள் என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஒரு மூடிய இடத்தில் நடைபெற்ற திருமண விழாவில் தற்போது வரை அதிகபட்சம் 200 பேர் கூடியிருக்கலாம், திறந்தவெளியில் ஒன்றுகூடுவதற்கு வரம்பு இல்லை.
முகக்கவசம் அணிவது, சமூக தூரத்தை பராமரிப்பது போன்ற கோவிட் நெறிமுறைகளை அனைவரும் கண்டிப்பாக பின்பற்ற வேண்டும். இந்த உத்தரவு ஏப்ரல் 30 வரை அமலில் இருக்கும் என்றும் அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.