டெல்லி

லைநகர் டெல்லியில் காவல்துறை பணியாளர்களுக்கு கொரேனா பரிசோதனை நடத்த பிரத்யேக சோதனை மையங்களை அமைகக மாநில அரசுக்கு  அம்மாநில துணைநிலை ஆளுநர் அனில் பைஜால் உத்தரவிட்டுள்ளார்.

டெல்லியில் கடந்த மாதம் நடைபெற்ற   நிஜாமுதீனில் தப்லிகி மாநாடு மற்றும்  அதன் தலைமையகத்தில் அங்கிருந்தவர்களை கொரோனா தொற்று காரணமாக வெளியேற்றும் பணியில் ஈடுபட்ட பல காவலர்களுக்கும் கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. இதையடுத்து, அப்போது பணியில் ஈடுபட்ட மற்ற காவல்துறையினர் மற்றும் சுகாதாரத்துறை  ஊழியர்களுக்கும் சோதனைகள் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் டெல்லி போலீஸாருக்கு கரோனா பரிசோதனை செய்வதற்காகவே பிரத்யேக சோதனை மையங்களை அமைக்க வேண்டும் என அம்மாநில ஆளுநர் அனில் பைஜால் உத்தரவிட்டுள்ளார்.

கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் வகையில் காவல்துறையினர்  போர் வீரர்களாக கண்காணித்து வருகின்றனர், அவர்களுக்கு போதிய பாதுகாப்பும், தடுப்பு நடவடிக்கைகளும் ஏற்பாடு செய்வது அவசியம், எனவே இதற்கு மாநில அரசு உரிய முக்கியத்துவம் வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தி உள்ளார்.