புதுடெல்லி:
உத்திரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தை சமூக வலைதளத்தில் விமர்சித்த டெல்லி பத்திரிக்கையாளர் கைது செய்யப்பட்டார்.

உத்திரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தை திருமணம் செய்ய விருப்பம் தெரிவித்துள்ளதாக பெண் ஒருவர் முதல்வர் அலுவலகம் முன்பு பேட்டி அளித்திருந்தார்.
இந்த வீடியோவை டெல்லி பத்திரிக்கையாளர் பிரசாந்த் கனோஜியா தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்திருந்தார். மேலும் இது குறித்து கருத்தும் தெரிவித்திருந்தார்.
முதல்வர் ஆதித்யநாத்தின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தியதாகக் கூறி அவரை டெல்லியில் உத்திரப் பிரதேச போலீஸார் கைது செய்தனர்.
அவர் மீது ஜாமீனில் வெளியே வரக்கூடிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. திங்கள் கிழமை வரை சிறையில் அடைக்கப்படுவார் என்று போலீஸார் தெரிவித்தனர்.
இதற்கிடையே சட்டம் ஒழுங்கை பாதிக்கும் வகையில் சமூக வலைதளங்களில் பதிவிட வேண்டாம் என பொதுமக்களை உத்திரப்பிரதேச போலீஸார் கேட்டுக் கொண்டுள்ளனர்.
[youtube-feed feed=1]