டில்லி:

பிஎஸ், ஓபிஎஸ் கையெழுத்து போட தடை கோரி, அதிமுக  எம்.பி. கே.சி.பழனிச்சாமி தொடர்ந்த வழக்கை டில்லி உயர்நீதி மன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

கட்சிக்கு எதிராக கருத்து தெரிவித்த அதிமுக எம்.பி. கேசி பழனிச்சாமியை அதிமுக ஒருங்கிணைப் பாளர் ஓபிஎஸ், துணை ஒருங்கிணைப்பாளர் ஈபிஸ் கட்சியை விட்டு நீக்கி நடவடிக்கை எடுத்தனர்.

இதன் காரணமாக, கே.சி.பழனிச்சாமி, ஈபிஎஸ், ஓபிஎஸ்-சுக்கு எதிராக தேர்தல் ஆணையத்திட மும், டில்லி உயர்நீதி மன்றத்திலும் வழக்கு தொடர்ந்தார்.  மனுவில், ஓபிஎஸ், ஈபிஎஸ்  கட்சி சம்பந்தமாக எந்தவொரு முடிவும் எடுக்கக்கூடாது, மக்களவைத் தேர்தலுக்கான அதிமுக வேட்பு மனுவில் ஓ.பி.எஸ். மற்றும் ஈ.பி.எஸ். கையெழுத்து போடக்கூடாது என்றும் அதற்கு தடை விதிக்கக்கோரி இருந்தார். இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க முறையீடு செய்திருந்தார்.

அதன்படி வழக்கு விசாரணை முடிந்து தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டது.

இந்த நிலையில்,  இந்த வழக்சின் தீர்ப்பு இன்று கூறப்பட்டது.  அப்போது,  கே.சி.பழனிசாமி தொடர்ந்த வழக்கை  தள்ளுபடி செய்வதாக அறிவித்த நீதிபதி  யோகேஷ் கண்ணா, , வழக்கில், இடைக்காலத் தடை விதிக்க எந்த காரணமும் இல்லை என்று கூறியுள்ளார்.