டெல்லி: திமுக எம்.பி.க்கள் ஆ.ராசா. கனிமொழி மீதான 32ஜி வழக்கின் விடுதலையை எதிர்த்த சிபிஐ அப்பீல் மனுவை விசாரணைக்கு ஏற்றுள்ள டெல்லி உயர்நீதிமன்றம், இதுகுறித்து  மார்ச் மாதம் 18ந்தேதி விசாரிக்கப்படும் என அறிவித்து உள்ளது.

மறைந்த முன்னாள் பிரதமர்  மன்மோகன்சிங் தலைமையிலான கூட்டணி அரசில்  திமுக எம்பி.க்கள் ஆ.ராசா தொலைத்தொடர்பு துறை அமைச்சராக இருjந்போது, நடைபெற்ற 2ஜி ஸ்பெக்ட்ரம்  விவகாரத்தில் ஊழல் நடைபெற்றதாக கூறப்பட்டுது. ஆ.ராசாவின் பதவி காலத்தில் 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் முறைகேடு செய்ததால் மத்திய அரசுக்கு ரூ.1.76 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டதாக பூடகமாக இந்திய தணிக்கைத் துறை தெரிவித்தது. இது இந்திய அரசியலில் பெரும் புயலை ஏற்படுத்தியது

இதையடுத்து, திமுக எம்.பி.க்கள் ஆ.ராசா, கனிமொழி மீது, சிபிஐ மற்றும் அமலாக்கப் பிரிவு வழக்குகள் பதிவு செய்தது. இது தொடர்பான வழக்கை விசாரித்த சிபிஐ நீதிமன்றம், அவர்களை விடுதலை செய்தது. அதாவது,  கடந்த 2017-ம் ஆண்டு நீதிபதி ஓபி ஷைனி இதுவரையும் விடுதலை செய்து அதிரடி தீர்ப்பு வழங்கினார்.  பின்னர் மோடி தலைமையில் மத்தியில் பாஜக ஆட்சிக்கு வந்ததும், 2ஜி வழக்கை மீண்டும் விசாரிக்க வேண்டும் என சிபிஐ  டெல்லி உயர்நீதி மன்றத்தில் மேல்முறையீடு செய்தது.  டெல்லி உயர்நீதிமன்றத்தில் கடந்த 2018-ம் ஆண்டு மேல்முறையீடு செய்யப்பட்டது

இந்த மேல்முறையீட்டு மனுவை விசாரணைக்கு ஏற்பதா? இல்லையா? என்பது தொடர்பாக முதலில் விசாரணை நடைபெற்றது. இது தொடர்பாக முதலில் 6 நீதிபதிகள் விசாரித்தனர். பின்னர் 7-வது நீதிபதியாக தினேஷ்குமார் சர்மாவும் இந்த வழக்கை விசாரித்தார். இறுதியாக கடந்த ஆண்டு ஆ.ராசா, கனிமொழி உள்ளிட்டோரின் விடுதலைக்கு எதிரான மேல்முறையீட்டு மனுவை விசாரணைக்கு ஏற்பதாக டெல்லி உயர்நீதிமன்றம் தெரிவித்தது. ஆனால், தொடர்ந்து விசாரணை நடைபெறாமல் வழக்கு கிடப்பில் போடப்பட்டுள்ளது.

இந்த நிலையில், சிபிஐ தரப்பில், 2ஜி வழக்கை விரைந்து விசாரிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.  மேலும் விசாரணைக்கு அதிக நாட்களை ஒதுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது. இதைத்தொடர்ந்து, 2ஜி மேல்முறையீடு வழக்கு  மார்ச் 18-ந் தேதி விசாரணை நடைபெறும் என டெல்லி உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இதற்கான அறிவிப்பை டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி மஹாஜன் அறிவித்துள்ளார்.