புதுடெல்லி:
இந்தியா ரேபிட் டெஸ்ட் கிட் வாங்கியதில் ஊழல் அம்பலமாகியுள்ளது.
டெல்லி உயர் நீதிமன்றம் தீர்ப்பை தொடர்ந்து, இந்தியாவில் வாங்கப்பட்ட 5 லட்சம் உண்டுபோ ஆண்டிபாடி டெஸ்ட் கிட்களை 30 கோடி ரூபாய் விலை கொடுத்து வாங்கியதில் ஊழல் நடந்துள்ளது அம்பலமாகியுள்ளது.
32 கோடி ரூபாய் செலவில், 5 லட்சம் வோண்ட்ஃபோ ஆன்டிபாடி டெஸ்ட் கிட்களை இறக்குமதி செய்ய இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐசிஎம்ஆர்), இடைத் தரகர்களிடம் ஆர்டர் செய்திருந்தது. இந்நிலையில், இந்த ஆர்டரை வினியோகம் செய்த இடைத்தரகர்கள், 18.75 கோடி ரூபாய் ஊழல் செய்துள்ளது தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
ஐசிஎம்ஆர் 5 லட்சம் டெஸ்ட் கிட்களை ஆர்டர் செய்திருந்தது.
மெட்ரிக்ஸ் நிறுவனம் 25 லட்சம் டெஸ்ட் கிட்கள் (ஒரு டெஸ்ட் கிட் ரூ. 245 விலையில்) = ரூ 12 கோடி இறக்குமதி செய்தது.
இந்த நிறுவனம் ரேர் மெட்டாபாலிக்களை 7.75 கோடி விலையில் = ரூ. 21 கோடிக்கு விற்பனை செய்தது
ஐசிஎம்ஆர்-க்கு ரேர் மெட்டாபாலிக்கை (ஒரு டெஸ்ட் கிட் 600 ரூபாய் விலையில் ) = ரூ. 30 கோடிக்கு விற்பனை செய்துள்ளது.
இதே மெட்ரிக்ஸ் நிறுவனம் கூடுதலாக தமிழ்நாட்டுக்கு 50 ஆயிரம் டெஸ்ட் கிட்களை ஷான் பயோடெக் & டையகனஸ்டிக் மற்றும் லாக்கிடெக் மூலம் வினியோகம் செய்துள்ளது. இந்த கிட்களை 600 ரூபாய் விலையில் விற்பனை செய்ய ஐசிஎமஆர் அனுமதி அளித்துள்ளதும் அம்பலமாகியுள்ளது.