புதுடெல்லி: Zenfone அல்லது Zen என்ற வணிகப் பெயர்களில், Asus மொபைல் ஃபோன்களை விற்பனை செய்ய டெல்லி உயர்நீதிமன்றம் தடைவிதித்துள்ளது.

வரும் ஜூலை மாதம் 28ம் தேதியிலிருந்து இந்த தடையுத்தரவு அமலுக்கு வருகிறது.

Zen என்ற வணிகப் பெயரில், தனக்குள்ள உரிமையை வலியுறுத்தியும், Asus மொபைல் ஃபோன்களுக்கு அந்தப் பெயரைப் பயன்படுத்துவதற்கு தடைவிதிக்கக் கோரியும் டெலிகேர் நெட்வொர்க், வழக்குத் தொடுத்திருந்தது. இதனையடுத்து இந்த தடையுத்தரவைப் பிறப்பித்துள்ளது டெல்லி உயர்நீதிமன்றம்.

ஏனெனில், மேற்கண்ட பெயரில் ஏற்கனவே பதிவுசெய்து, கடந்த 2008ம் ஆண்டு முதலே டெலிகேர் நெட்வொர்க் நிறுவனம் சந்தையில் விற்பனை செய்து வருகிறது. ஆனால், Asus நிறுவனம் கடந்த 2014ம் ஆண்டிலிருந்துதான் அந்தப் பெயரில் விற்பனை செய்யத் தொடங்கியது என்பதே வழக்கின் முக்கிய வாதம்.

ஆனால், இந்த Zen என்ற பெயர், Asus நிறுவனத்தின் முதன்மை செயல் அதிகாரி ஜோன்னி ஷி என்பவர் ஜென் தத்துவத்தில் கொண்ட நம்பிக்கையின் அடிப்படையில் வைக்கப்பட்ட பெயர் என்று அந்த நிறுவனத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.