டில்லி
டில்லி உயர்நீதிமன்றம் கரோல் பாக்கில் அமைக்கப்பட்டுள்ள 108 அடி அனுமன் சிலைய அகற்ற உத்தரவிட்டுள்ளது.
டில்லியில் பல இடங்களில் நிலங்கள் ஆக்ரமிக்கப் பட்டு அந்த இடங்களில் மத சார்புள்ள சில கட்டிடங்கள் அல்லது சிலைகள் நிறுவப்பட்டுள்ளன. அவைகளில் டில்லி கரோல்பாக் பகுதியில் உள்ள 108 அடி உயரமுள்ள பிரம்மாண்டமான அனுமன் சிலையும் ஒன்றாகும். உச்ச நீதிமன்ற உத்தரவின் படி இதை அகற்றக் கோரி ஒரு தன்னார்வ தொண்டு நிறுவனம் பொது நல வழக்கு மனு ஒன்றை பதிவு செய்தது
அந்த மனு இன்று நீதிபதிகள் கீதா மிட்டல் மற்றும் ஹரிசங்கர் கீழ் அமைந்துள்ள அமர்வில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த அமர்வு அந்த அனுமன் சிலையை சேதாரமின்றி அப்படியே தூக்கி செல்ல உத்தரவிட்டது. “அனுமன் சஞ்சீவி மலையை அப்படியே தூக்கியது நினைவிருக்கலாம். அது போல இந்த அனுமன் சிலையையும் ஆகாய மார்க்கமாக அப்படியே தூக்கலாம். அமெரிக்காவில் பல வானுயர்ந்த கட்டிடங்கள் அது போல் அகற்றப் பட்டுள்ளன. அதே முறையில் இந்த சிலையும் அகற்றப்பட்டு சட்டத்துக்கு உட்பட இடத்தில் அமைக்கலாம்” என அமர்வு உத்தரவிட்டுள்ளது.