டில்லி

எச் ஐ வி மற்றும் எய்ட்ஸ் நோயாளிகளுகான இன்ஷ்யூரன்ஸ் பாலிசி உண்டா என டில்லி உயர் நீதிமன்றம் வினா எழுப்பி உள்ளது.

எச் ஐ வி மற்றும் எய்ட்ஸ் நோயினால் பாதிக்கப்பட்டவர்களும் சாதாரண மக்களே எனவும் அவர்களை எந்த ஒரு காரணத்துக்காகவும் ஒதுக்கி வைக்காமல் மற்றவர்களைப் போலவே நடத்த வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது.    ஆனால் அவர்களுக்கு அடிப்படை உரிமையான ஆயுள் காப்பீடு மற்றும் மருத்துவக் காப்பிடுகள் வழங்கப்படவில்லை என ஒரு பொது நல வழக்கு ஒன்று டில்லி உயர் நீதிமன்றத்தில் போடப்பட்டது..

இந்த வழக்கு விசாரணையின் போது டில்லி உயர் நீதிமன்றம்,  எச் ஐ வி மற்றும் எய்ட்ஸால்  பாதிக்கப் பட்டோருக்கு என ஏதேனும் ஆயுள் காப்பீட்டு பாலிசியோ அல்லது மருத்துவ பாலிசியோ இருக்கிறதா என கேள்வி எழுப்பியது.   அத்துடன் அவ்வாறு இல்லை எனில் இந்திய காப்பீடு வரைமுறைக் கழகத்துடன் ஆராய்ந்து ஏதும் பாலிசி வழஙக் முடியுமா என்பதையும் நீதிமன்றத்துக்கு அளிக்க வேண்டும் என காப்பீடு நிறுவனங்களுக்கு உத்தரவிட்டுள்ளது.  இதற்கான பதிலை அடுத்த ஆண்டு ஜனவரிமாதம் 22ஆம் தேதிக்குள் வழங்க வேண்டும் என அந்த உத்தரவில் குறிப்பிடப் பட்டுள்ளது.

இந்த வழக்குடன் ஏற்கனவே நிலுவையில் உள்ள மற்றொரு வழக்கையும் நீதி மன்றம் இணைத்துள்ளது.   அந்த வழக்கு பிறவிக் குறைகளுடன் பிறந்த குழந்தைகளுக்கான காப்பிடு குறித்த வழக்காகும்.   இந்த வழக்கில் கடந்த 2014க்குள் அனைத்து நபர்களுக்கும் காப்பீடு எடுக்கும் உரிமை வழங்க வேண்டும் என அரசுகு தெரிவித்திருந்ததை சுட்டிக் காட்டிய நீதிமன்றம் இது வரை எந்த நடவடிக்கையும் எடுக்கப் படாததற்கு கண்டனம் தெரிவித்துள்ளது.