மும்பை
பாபா ராம்தேவ் குறித்த தவறான பதிவுகளுக்குத் தடை விதித்த தீர்ப்பை எதிர்த்து முகநூல் அளித்த மேல் முறையீட்டை விசாரிக்க மும்பை நீதிமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது.
பிரபல யோகா ஆசிரியர் ராம்தேவ் தம்மைக் குறித்துக் கடந்த வருடம் வெளியாக இருந்த சாமியார் முதல் ஜாம்பவான் வரை என்னும் புத்தகத்தில் தவறான மற்றும் பெருமையைக் குலைக்கும் தகவல் கள் உள்ளதாக வழக்கு தொடர்ந்தார். அத்துடன் இந்த புத்தகம் குறித்து வெளியான வீடியோவிலும் அத்தகைய தகவல்கள் உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
டில்லி உயர்நீதிமன்றம் இப்புத்தகத்தில் உள்ள ஆட்சேபகரமான பகுதிகள் நீக்கப்பட்ட பிறகு புத்தகம் மற்றும் வீடியோவை வெளியிட வேண்டும் எனத் தீர்ப்பு அளித்தது. பாபா ராம்தேவ் இந்த வீடியோ தீர்ப்புக்குப் பிறகும் முகநூல், கூகுள், யூ டியூப் உள்ளிட்டவற்றில் பகிரப்படுவதாகப் புகார் அளித்தார். அதையொட்டி இந்த வீடியோ உள்ளிட்ட அனைத்துப் பதிவுகளையும் வெளியிடத் தடை விதித்து அவற்றை உடனடியாக நீக்க உத்தரவிடப்பட்டது.
இது குறித்த மற்றொரு வழக்கு நிலுவையில் உள்ள போது இந்த தடை உத்தரவு அளித்தது செல்லாது என முகநூல் சார்பில் மேல் முறையீடு செய்யப்பட்டுள்ளது. இந்த மேல் முறையீட்டு மனுவை விசாரணைக்கு எடுத்துக் கொள்ள மும்பை உயர்நீதிமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது. அதே வேளையில் தடை விதிக்கப்பட்டுள்ள உத்தரவுக்கு எதிராக இடைக்காலத் தடை விதிக்க முடியாது என அறிவிக்கப்பட்டுள்ளது.