டில்லி
டில்லியில் தனியார் பள்ளிகளை விட அரசு பள்ளிகளில் அதிக மாணவர்கள் சிபிஎஸ்ஈ பத்தாம் வகுப்பில் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
ஆம் ஆத்மி கட்சியின் பெண் தலைவர்களில் ஒருவரானஅதிஷி மர்லேனா. இவர் டில்லி துணை முதல்வரின் ஆலோசகராக இருந்தார். இவர் தனது பதவிக் காலத்தில் தலைநகரில் உள்ள அரசுப் பள்ளிகளின் கல்வித் தரத்தை உயர்த்த பல நடவடிக்கைகள் எடுத்து புகழ் பெற்றார். மத்திய அரசின் அனுமதியின்றி பதவி அளித்ததாக கூறி துணை முதல்வர் மனிஷ் சிசோடியாவின் ஆலோசகராக இருந்த இவருடைய பதவியை மத்திய அரசு ரத்து செய்தது.
டில்லியில் அரசுப் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகள் எல்லாவற்றிலுமே சிபிஎஸ்ஈ பாடத்திட்டம் பின்பற்றப்படுகிறது. தற்போது வெளியாகி உள்ள சிபிஎஸ்ஈ பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகளில் அரசுப் பள்ளிகளில் தனியார் பள்ளிகளை விட அதிக அளவில் மாணவர்கள் தேர்ச்சி பெற்றனர்.
இதை ஒட்டி டிவிட்டரில் அதிஷி மர்லேனாவுக்கு மக்கள் பாராட்டு மழை பொழிந்து வருகின்றனர்.