டில்லி

டில்லி அரசு மருத்துவமனையில் செவிலியர்கள் மலையாளத்தில் பேசக் கூடாது எனவும் இந்தி அல்லது ஆங்கிலத்தில் பேசவும் உத்தரவு இடப்பட்டுள்ளது.

டில்லியில் கோவிந்த் பல்லப் பந்த் இன்ஸ்டிடியூட் ஆஃப் போஸ்ட் கிராஜுவேட் மெடிகல் இன்ஸ்டிடியூஷன் அண்ட் ரிசர்ச் மருத்துவமனை உள்ளது.  அரசு மருத்துவமனையான இதை சுருக்கமாக ஜிப்மெர் என அழைப்பது வழக்கமாகும்.    இங்குத் தென் இந்தியாவில் இருந்து வந்து பல செவிலியர்கள் பணி புரிகின்றனர்.  இவர்களில் கேரளாவைச் சேர்ந்தோர் மிகவும் அதிகமாகும்.

இந்நிலையில் ஜிப்மெர் ஒரு சுற்றறிக்கை வெளியிட்டுள்ளது.  அதில் செவிலியர்கள் கண்டிப்பாக மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் பேசக் கூடாது எனவும் இந்தி மற்றும் ஆங்கிலத்தில் தான் பேச வேண்டும் எனவும்  மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் உத்தரவு இடப்பட்டுள்ளது.

இதற்குக் காரணம் அங்குள்ள நோயாளிகளில் பலருக்கு வேறு மொழிகளில் பேசினால் புரியாது எனவும் மிகவும் குழப்பம் ஏற்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மருத்துவமனையின் இந்த உத்தரவு தென் இந்தியச் செவிலியர்களை கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.   தங்கள் தாய் மொழியில் ஒருவருக்கொருவர் பேசுவதை அரசு தடை செய்வதற்கு இவர்கள் கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ளனர்.