டில்லி
டில்லி அரசு மகளிருக்கு மாத ரூ. 1000 உதவித் தொகை வழங்கப்படும் என அறிவித்துள்ளது.
டில்லி அரசு இன்று 2024-25 நிதியாண்டுக்கான ரூ.76,000 கோடி பட்ஜெட்டை நிதி மந்திரி அதிஷி சட்டசபையில் தாக்கல் செய்தார். பட்ஜெட்டில் ‘முக்கியமந்திரி மகிளா சம்மன் யோஜனா’ திட்டத்தின் கீழ் டில்லியில் 18 வயதுக்கு மேற்பட்ட ஒவ்வொரு பெண்ணுக்கும் மாதம் ரூ.1,000 வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நிதி அமைச்சர் அதிஷி பட்ஜெட்டை தாக்கல் செய்த பின்,
“நாங்கள் அனைவரும் ராமராஜ்ஜியத்தால் ஈர்க்கப்பட்டோம். நாங்கள் உழைக்கிறோம். ராம ராஜ்ஜியத்தின் கனவை நனவாக்க அரசாங்கம் முயன்று வருகிறது. டெல்லி அரசுப் பள்ளிகளில் படிக்கும் 2,121 மாணவ-மாணவியர் 2023ல் ஜே.இ.இ., மற்றும் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளனர்.”
என்று கூறி உள்ளார்.
தமிழகத்தில் தி.மு.க. அரசு திருமணமான பெண்களுக்கு மாதம் ரூ.1,000 வழங்கி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.