விளம்பர செலவு 97 கோடி ரூபாய்: ஆம்ஆத்மி செலுத்த டில்லி கவர்னர் அதிரடி உத்தரவு!

 

டில்லி,

விளம்பரத்திற்காக மக்களின் வரிப்பணத்தை ஆம்ஆத்மி அரசு வீணாக செலவழித்து உள்ளது. அதற்கான ரூ.97 கோடியை ஆம்ஆத்மி கட்சி செலுத்த வேண்டும் என டில்லி மாநில கவர்னர் அனில் பைஜால் அதிரடியாக அறிவித்து உள்ளார்.

 டில்லி மாநில கவர்னர் அனில் – முதல்வர் கெஜ்ரிவால்

தலைநகர் டில்லியில் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையில் ஆம்ஆத்மி அரசு நடைபெற்று வருகிறது. அங்கு, அரசுக்கும் கவர்னருக்கு இடையே ஏழாம் பொருத்தம்.

இந்நிலையில்,  ஆம் ஆத்மி அரசு தனது சாதனைகளை விளக்கி விளம்பரம் செய்து வருகிறது. இதுவரை விளம்பர நிறுவனங்களுக்கு 42 கோடி ரூபாயை செலுத்திவிட்ட டெல்லி அரசு, இன்னும் 55 கோடி ரூபாய் செலவு செய்ய நிதி ஒதுக்கியுள்ளது.

இதனால், கடுப்படைந்த டில்லி மாநில கவர்னர் அனில் பைஜால்,  உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை சுட்டிக்காட்டி,  மக்கள் வரிப்பணத்தை ஆம்ஆத்மி அரசு  தவறாக பயன்படுத்தி உள்ளதாக குற்றம் சாட்டினார்.

மேலும், விளம்பரம் செய்யப்பட்ட ரூ. 97 கோடி ரூபாயை ஒரு மாதத்திற்குள் ஆம்ஆத்மி கட்சி திருப்பிச் செலுத்த வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார்.

இதுகுறித்து, விரிவான விசாரணை நடத்த டில்லி மாநில  தலைமைச் செயலாளர் எம்.எம்.குட்டிக்கும் உத்தரவிட்டுள்ளார்.


English Summary
Delhi Governer orders recovery of Rs 97 crore from Arvind Kejriwal's AAP party