டெல்லி: தலைநகர் டெல்லியில் நிலவும் கடும் மூடுபனி காரணமாக 100க்கும் மேற்பட்ட விமான சேவைகள் பாதிக்கப்பட்டு உள்ளதாக மத்திய விமான போக்குவரத்த துறை தெரிவித்து உள்ளது.
டெல்லியின் வெப்பநிலை 5°C-க்குக் குறைந்துள்ளதால் டெல்லி உறையும் நிலைக்கு சென்றுள்ளது. இதன் காரணமாக டெல்லி கடுமையான குளிர்கால நிலையை எதிர்கொள்கிறது. மாநிலம் முழுவதும் மூடுபனியால் சூழ்ந்துள்ளது, IGI விமான நிலையத்தில் குறிப்பிடத்தக்க இடையூறுகள் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. விமானங்கள் இறங்க முடியாத அளவுக்கு மூடுபனி ஏற்பட்டுள்ளதால் 100க்கும் மேற்பட்ட விமானங்கள் தாமதமாகியுள்ளன, காற்றின் தரக் குறியீடு (AQI) உச்ச அளவை எட்டியுள்ளது. இதேபோன்ற வானிலை சவால்கள் நொய்டா, மும்பை மற்றும் பெங்களூருவை பாதிக்கின்றன, அங்கு மோசமான காற்றின் தரம் மற்றும் தெரிவுநிலை சிக்கல்கள் பதிவாகியுள்ளன.
டெல்லியில் காற்றின் தரக்குறியீடு இன்று காலை 6 மணி அளவில் 408 ஆக பதிவானது. மேலும் படிக்க நாடு முழுவதும் தற்போது குளிர்காலம் நிலவி வருகிறது. குறிப்பாக வட இந்தியாவில் இந்த காலத்தில் கடும் குளிரும், பனிப்பொழிவும் இருக்கும். அதன்படி, வட இந்தியாவில் இப்போது குளிர்காலம் நிலவி வருவதால் அங்குக் கடுமையான மூடுபனி நிலவுகிறது.
இதனால் டெல்லியில் இன்று மட்டும் 100-க்கும் மேற்பட்ட விமானங்களும் சுமார் 26 ரெயில் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன.
டெல்லி சர்வதேச விமான நிலையம் இன்று காலை வெளியிட்ட அறிவிப்பில், அடர்ந்த மூடு பனி காரணமாக விமான புறப்பாடுகள் பாதிக்கப்பட்டுள்ளது. விமானங்கள் சுமார் 41 நிமிடங்கள் தாமதமாக இயக்கப்படும் என்று தெரிவித்துள்ளது. மேலும் டெல்லியில் அதிகபட்ச மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 6 முதல் 20 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது. இதன்படி இன்று குறைந்தபட்ச வெப்பநிலை 9.6 டிகிரி செல்சியஸாகப் பதிவாகியுள்ளது.
வட இந்தியாவில் கடந்த சில வாரங்களாக அடர்ந்த மூடுபனி காரணமாக நூற்றுக்கணக்கான விமானங்கள் மற்றும் ரெயில்கள் ரத்து மற்றும் தாமதமாக இயக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.