மருத்துவர்கள் போராட்டத்தில் தடியடி: நாடு முழுவதும் மருத்துவர்கள் வேலை நிறுத்தம் செய்ய அழைப்பு

Must read

புதுடெல்லி :
டெல்லியில் மருத்துவர்கள் போராட்டத்தில் போலீஸ் தடியடி நடத்தியதை கண்டித்து நாடு முழுவதும் மருத்துவர்கள் வேலை நிறுத்தம் செய்ய வேண்டுமென அகில இந்திய மருத்துவ சங்க கூட்டமைப்பு அழைப்பு விடுத்துள்ளது.

நீட் முதுநிலை கலந்தாய்வை உடனடியாக நடத்த கோரி டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்ட மருத்துவ மாணவர்கள் மீது காவல் துறையினர் தடியடி நடத்தியுள்ளனர். இதை கண்டித்து நாடு முழுவதும் உள்ள மருத்துவர்கள் வேலை நிறுத்தம் செய்ய அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

காவல்துறையின் கைது நடவடிக்கைக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தி, மருத்துவர்களுக்கு அநீதி இழைக்கப்படுவதாக குற்றம் சாட்டியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

More articles

Latest article