டெல்லி: கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட டெல்லி மாவட்ட நீதிபதி, சிகிச்சை பலன்றி உயிரிழந்தார்.
இந்தியாவில் கொரோனா வைரசின் இரண்டாவது அலை மிகவும் வேகமாக பரவி வருகிறது. டெல்லியில் தீவிரமடைந்துள்ள தொற்று பாதிப்பு காரணமாக மருத்துவமனைகள் நிரம்பி வழிகின்றனர். தொற்று பாதிப்பு ஜாதி, மத பேதமின்றி அனைத்து தரப்பினரையும் கடுமையாக தாக்கியுள்ளது. இதனால், அங்கு மீண்டும் ஒரு வாரம் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது.
இந்த நிலையில், டெல்லியில் உள்ள மாவட்ட குடும்பநல நீதிமன்றத்தில் நீதிபதியாக பணியாற்றி வந்த 47 வயதான கோவை வேனுகோபால் என்ற நீதிபதி, கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, கடந்த வாரம் சிகிச்சைக்கா டெல்லி லோக் நாயக் ஜெய் பிரகாஷ் நாராயன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில், நீதிபதி வேனுகோபால் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
“நீதி வழங்கல் முறையைச் செயல்படுத்துவதற்கு தினசரி ஆயிரக்கணக்கான மக்களிடையே நாங்கள் பணியாற்ற வேண்டியிருப்பதால், அனைத்து நீதிபதிகள் மற்றும் வழக்கறிஞர்களுக்கும் தடுப்பூசி கட்டாயமாக்குமாறு நாங்கள் தொடர்ந்து அரசாங்கத்திடம் கேட்டுக்கொண்டிருக்கிறோம்,” எங்கள் கோரிக்கைக்கு அரசாங்கம் ஒப்புக் கொண்டால், இந்த சம்பவம் நடந்திருக்காது ‘என்றும், நீதிபதிகள் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி போட அரசு முக்கியத்துவம் அளிக்காததே நீதிபதி வேனுகோபாலின் உயிரிழப்புக்கு காரணம் என்று நீதிமன்ற பார் அசோசியேசன் குற்றஞ்சாட்டியுள்ளது.