புதுடெல்லி:
டெல்லி – டேராடூன் இடையிலான 240 கிலோ மீட்டர் தொலைவை இரண்டரை மணி நேரத்தில் கடக்கும் வகையில் 13 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டில் எக்ஸ்பிரஸ் சாலை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

அதன்படி இந்த சாலையில் மணிக்கு 100 கிலோ மீட்டர் வேகத்தில் சென்றால், பயண இலக்கை இரண்டரை மணி நேரத்தில் அடைந்திட முடியும் எனக் கூறப்பட்டுள்ளது. தற்போது, டெல்லியிலிருந்து, 240 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள டேராடூன் செல்ல ஆறரை மணி நேரமாகிறது.

புதிய எக்ஸ்பிரஸ் சாலை அமைந்தால், இரண்டரை மணி நேரத்தில், டெல்லியிலிருந்து டேராடூன் செல்லலாம். ஆசியாவிலேயே, வனப்பகுதி வழியே செல்லும், நீளமான சாலையாக இது அமைய உள்ளதால், குறிப்பிட்ட பகுதிகளில், 12 கிலோ மீட்டர் நீளத்திற்கு, மேம்பால வடிவில் சாலைகள் அமைக்கப்படும் எனக் கூறப்படுகிறது.

இதன்மூலம், வனவிலங்குகள் நடமாட்டம் தடைபடாததோடு, அவை, வாகனங்களில் அடிப்பட்டு இறப்பதும் தவிர்க்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.