டெல்லி: எய்ம்ஸ் மருத்துவனை மீது தாக்குதல் மற்றும்  பாதுகாப்பு ஊழியரை  (செக்யூரிட்டி) தாக்கியது தொடர்பான வழக்கில், ஆம் ஆத்மி சட்டமன்ற உறுப்பினர் சோம்நாத் பாரதிக்கு  டெல்லி நீதிமன்றம் இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்துள்ளது.

கடந்த 2016ம் ஆண்டு எய்ம்ஸ் மருத்துவமனையின் காம்பவுண்டு சுவரை ஜேசிபி உதவியுடன் இடித்துக்கொண்டு உள்ளே சென்று நூற்றுக்கணக்கானோர் சேர்ந்த கும்பல், மருத்துவமனையை தாக்கி சேதப்படுத்தியது. இந்த  கும்பலில், ஆம்ஆத்மி எம்எல்ஏ சோம்நாத் பாரதியும் இடம்பெற்றிருந்தார். இவர் அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த ஊழியரை தாக்கியதாக கூறப்பட்டது.

இது தொடர்பான வழக்கு டெல்லியில் உள்ள  எம்.பி. / எம்.எல்.ஏ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கின் விசாரணை முடிந்து,  ஆம் ஆத்மி கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் சோம்நாத் பாரதியை குற்றவாளி என்று தீர்ப்பளித்துள்ளது.இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்தும் உத்தரவிட்டது.

மேலும், தண்டனைக்கு எதிர்த்தது, பாரதி டெல்லி உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யும் வகையில், அவருக்கு   உடனே ஜாமின் வழங்கப்பட்டது.

இந்த வழக்கில் இணை குற்றம் சாட்டப்பட்டவர்கள், தலீப் ஜா, ஜகத் சைனி, ராகேஷ் பாண்டே மற்றும் சந்தீப் ஆகியோர் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்படாததால், அவர்கள் விடுதலை செய்யப்பட்டனர்.

எய்ம்ஸ் மருத்துரவமன அந்த பகுதியில் உள்ள உள்ள மழைநீர் வடிகால் பகுதியை  சட்டவிரோதமாக  ஆக்கிரமித்துள்ளதாக கூறப்பட்டது.  வணிக நடவடிக்கை களுக்காக, அதாவது பார்க்கிங் நோக்கங்களுக்காக விரிவுபடுத்தப்பட்டதாக கூறப்பட்டது. இதையடுத்து, அதை அகற்றும் நடவடிக்கையில் ஆம்ஆத்மி எம்எல்ஏ ஈடுபட்ட நிகழ்வு வன்முறையாக மாறியது. இது தொடர்பான வழக்கில் பாரதிக்கு 2 ஆண்டு சிறை தண்டனை கிடைத்துள்ளது.