டெல்லி: டெல்லியில் ஒரே நாளில் 18 பேர் கொரோனா தொற்றால் உயிரிழந்து உள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
டெல்லியில் சில தினங்களாக கொரோனா தாக்கம் குறைந்து வருகின்றது. அந்த வகையில், இன்று 787 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. அதன் மூலம் அங்கு கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 1,53,367 ஆக இருக்கிறது.
அதுமட்டுமின்றி, டெல்லியில் ஒரே நாளில் 740 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். ஒட்டு மொத்தமாக குணமடைந்தோரின் எண்ணிக்கை 1,38,301 ஆகும்.
ஒரே நாளில் 18 பேர் உயிரிழக்க, உயிரிழந்தோரின் எண்ணிக்கை 4,214 ஆக அதிகரித்துள்ளது. டெல்லியில் 10,852 பேர் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர் டெல்லி சுகாதாரத்துறை அமைச்சகம் தமது அறிக்கையில் தெரிவித்துள்ளது.
Patrikai.com official YouTube Channel