டெல்லியில் 805 பேருக்கு கொரோனா தொற்று: 15 பேர் உயிரிழப்பு

Must read

டெல்லி: டெல்லியில் இன்று ஒரே நாளில் 805 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட, 15 பேர் உயிரிழந்துள்ளனர்.

டெல்லியில் தொடக்கத்தில் அதிக கொரோனா தொற்றுகள் காணப்பட்டன. ஆனால் கடந்த சில நாட்களாக அதன் தாக்கம் குறைவாக பதிவானது.

இன்றைய நிலவரப்படி, 805 பேருக்கு கொரோனா உறுதியாகி உள்ளது. இது சற்று குறைவான பாதிப்பாகும். இதன் மூலம் அங்கு மொத்த பாதிக்கப்பட்டவரின் எண்ணிக்கை 1,38,482 ஆக அதிகரித்தது.

டெல்லியில் ஒரே நாளில் 937 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். அங்கு குணமடைந்தோரின் எண்ணிக்கை 1,24,254 ஆக அதிகரித்துள்ளது.

மேலும் ஒரே நாளில் 17 பேர் உயிரிழக்க, பலியானவர்களின் எண்ணிக்கை 4,021 ஆக அதிகரித்துள்ளது. தற்போது 10,207 பேர் மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளதாக டெல்லி சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

More articles

Latest article