டெல்லி:

கொரோனா நோயாளிகளுக்கு தனியார் மருத்துவமனைகள் சிகிச்சை அளிக்க மறுத்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

சமீபத்தில் 80வயதான கொரோனா நோயாளி ஒருவரை டெல்லியில் உள்ள பிரபல மருத்துவமனைகள் சிகிச்சை அளிக்க மறுப்பு தெரிவித்து விட்ட நிலையில், அந்த முதியவர் பரிதாபமாக உயிரிழந்தார். இது தொடர்பான டெல்லி உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

இந்த நிலையில், இன்று மக்களிடையே உரையாடிய மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்,  கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க போதிய அளவிலான  வென்டிலேட்டர்கள், படுக்கைகள் அரசு மருத்துவமனையில் உள்ளன.

இங்கு சில தனியார் மருத்துவமனைகள் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க மறுப்பதாக செய்திகள் வெளியாகி வருகிறது. அவ்வாறு மறுக்கும் மருத்துவமனைகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்  என எச்சரிக்கை விடுத்தார்.

[youtube-feed feed=1]