டில்லி :
டில்லி முதலவர் அரவிந்த் கெஜ்ரிவாலின் மைத்துனர் ஊழல் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டார். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
டில்லி அரசு பொதுப்பணித்துறையில் நடைபெற்ற ஊழல் தொடர்பாக முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் உறவினர் வினய் பன்சாலை மாநில ஊழல் தடுப்பு பிரிவு போலீசார் கைது செய்தனர். அவரிடம் டெல்லி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வினய் பன்சால் தனது தந்தையுடன் சேர்ந்து. பி.டபிள்யூ.டி. பணியில் ஊழல் செய்ததாக கூறப்படுகிறது. பொதுப்பணித்துறையில் நடைபெற்ற ஊழலில், வினய் பன்சாலின் நிறுவனம், கட்டுமான பணிக்கான பொருட்களை கொள்முதல் செய்ததற்கான போலியான பில்களை சமர்ப்பித்திருந்தது என்று குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
அவர்கள் சமர்ப்பித்திருந்த போலியான பில்களின் பெயரில் நிறுவனங்கள் இல்லை என்பது விசாரணையில் தெரிய வந்ததாகவும், அதைத்தொடர்ந்தே வினய் பன்சால் இன்று கைது செய்யப்பட்டுள்ளார் என்று காவல்துறையினர் தெரிவித்து உள்ளனர்.
பஸ்ஸால் கைது செய்யப்பட்டுள்ளததை காவல்துறை ஆணையர் அர்விந்த் டீப் உறுதிப்படுத்தி உள்ளார்
கைது செய்யப்பட்டுள்ள வினய் பன்சால், அரவிந்த் கெஜ்ரிவாலின் மைத்துனர் என்பது குறிப்பிடத்தக்கது.