டெல்லி:  கலால் கொள்கை முறைகேடு வழக்கில்  டெல்லி  ரோஸ் அவென்யூ நீதிமன்றம் டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலுக்கு ஜாமின் வழங்கியது.  முன்னதாக சம்மனுக்கு தடை விதிக்க கோரிய கெஜ்ரிவால் மனுவை டெல்லி உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்த நிலையில், இன்று நீதிமன்றத்தில் ஆஜரான கெஜ்ரிவாலுக்கு ஜாமின் வழங்கப்பட்டது.

கலால் கொள்கை முறைகேடு தொடர்பான வழக்கில், அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜராக மறுத்த டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் மீது அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கில், டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றம்,. அவர் நேரில் ஆஜராக சம்மன் அனுப்பியது. அதன்படி, இன்று கெஜ்ரிவால்  நீதிமன்றத்தில் ஆஜரானார். அத்துடன், முன்ஜாமின் கோரியும் மனுத்தாக்கல் செய்தார்.

இந்த விசாரித்த நீதிமன்றம்,  அவருக்கு நீதிமன்றம் ஜாமின் வழங்கி உத்தரவிட்டது. அதன்படி,   டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தில் ரூ.15,000  மற்றும் ரூ.1 லட்சம் சூரிட்டியின் பேரில்  ஜாமீன் பெற்ற பிறகு நீதிமன்றத்தில் இருந்து  வெளியேறினார்.

முன்னதாக  டெல்லி கலால் கொள்கை வழக்கில் விசாரணைக்கு வருமான 8 முறை அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியும்,  கெஜ்ரிவால் அனுப்பிய சம்மனை ஏற்வில்லை,.  அரவிந்த் கெஜ்ரிவாலின் கொள்கை உருவாக்கம், அது இறுதி செய்யப்படுவதற்கு முன் நடைபெற்ற கூட்டங்கள் மற்றும் லஞ்ச குற்றச்சாட்டு போன்ற தலைப்புகளில் அரவிந்த் கெஜ்ரிவாலின் அறிக்கையை பதிவு செய்ய அமலாக்க இயக்குனரகம் விசாரணைக்கு அழைத்தது. ஆனால், அதை ஏற்காததால், அமலாக்கத்துறை சார்பில்,  கெஜ்ரிவால் மீது இரண்டு புகார்களை நீதிமன்றத்தில்  பதிவு செய்துள்ளது.  அதை விசாரணை நடத்திய ரோஸ் அவென்யூ நீதிமன்றம் மார்ச் 16ந்தேதி விசாரணைக்கு ஆஜராகும்படி சம்மன் அனுப்பியது.

இநத் சம்மனை எதிர்த்து, அரவிந்த் கெஜ்ரிவால் தரப்பில் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. அந்த மனுவில்,  கலால் வழக்கில்  தனக்கு அனுப்பப்பட்ட சம்மன்கள் சட்டவிரோதமானது மற்றும் அரசியல் உள்நோக்கம் கொண்டவை என்று கூறியதுடன், அதற்கு தடை விதிக்க வேண்டும் என்றும் கூறியிருந்தார். ஆனால், நீதிமன்றம் சம்மன்களுக்கு தடை விதிக்க நீதிமன்றம் மறுத்துவிட்டது. கெஜ்ரிவால் தனது பங்கில் வேண்டுமென்றே கீழ்ப்படியாமை இல்லை என்று கூறியதுடன் ரோஸ் அவென்யூ நீதி மன்றத்தில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டது.

இதையடுத்து, வேறு வழியில்லாமல், இன்று கெஜ்ரிவால் நீதிமன்றத்தில் ஆஜரானார். தொடர்ந்து முன்ஜாமின் கோரி மனுவும் தாக்கல் செய்தார். வழக்கு விசாரித்த நீதிமன்றம், கெஜ்ரிவாலுக்கு ஜாமின் வழங்கி உத்தரவிட்டது.