டெல்லி: தலைநகர் டெல்லி செங்கோட்டை அருகே நடைபெற்ற  கார் குண்டு வெடிப்பு சம்பவத்தில் ஈடுபட்டது மருத்துவர் உமர்நபி தான் என்பது DNA பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டடுள்ளது. இது அவரது குடும்பத்தினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

நவம்பர் 10ந்தேதி அன்று  டெல்லி செங்கோட்டை அருகே அமைந்துள்ள மெட்ரோ ரயில் நிலையம் கார் நிறுத்தும் இடத்தில்  மாலை நேரத்தில்  பலத்த சத்ததுடன் கார் ஒன்று வெடித்து சிதறியது. இதில் காரின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த பைக் மற்றும் நான்கு வாகனங்களும் தீ பற்றி எரிந்து சேதம் அடைந்தது. மேலும் இந்த விபத்தில் 13 பேர் உடல் சிதறி உயிரிழந்தனர். 20க்கும் மேற்பட்டவர்கள் படுகாயம் அடைந்தனர்.

இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. இந்த குறித்து தகவல் அறிந்து வந்த டெல்லி காவல்துறையினர் விசாரணை மேற்க்கொண்டனர்.
விசாரணையின் தொடக்கத்தில் இந்த குண்டு வெடிப்பா, விபத்தா, தற்கொலை படை தாக்குதலா என பல கோணங்களில் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இதையடுத்து, கார் வெடிப்பு நடந்த பகுதி முழுவதும் காவல்துறையினரின் கண்ட்ரோலுக்கு எடுக்கப்பட்டு, சோதனைகள் மேற்கொள்ளப்பட்டது.

அப்போது கார் குண்டுவெடிப்பு நடைபெற்ற  இடத்தில் தோட்ட மற்றும், அம்மோனியம் நைட்ரேட் பயன்படுத்தப்பட்டது தெரியவந்தது. இந்த ரசாயனம் உரங்கள் மற்றும் தொழில்துறை வெடிபொருட்கள் தயாரிப்பில் பயன்படுத்தப்படுகிறது.மேலும் இது பயங்கரவாதத்தின் தற்கொலைப்படை தாக்குதல் என்று உறுதி செய்யப்பட்ட நிலையில், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உயர்மட்ட ஆலோசனை கூட்டத்தை நடத்தினார். இந்த குண்டு வெடிப்பு சம்பவத்தை என்.ஐ. ஏ விசாரிக்க உத்தரவிட்டார்.

இதனையடுத்து மத்திய அரசின் உத்தரவிரின் பேரில் என்.ஐ. ஏ. அதிகாரிகள் விசாரணையை தீவிரப்படுத்தினர். தொடர் விசாரணையில் பல அதிர்ச்சி தகவல்கள் வெளியானது. குண்டுவெடிப்பின் மூளையாகக் செயல்பட்டது டாக்டர் உமர் முகமது என்று தெரியவந்தது.

டெல்லியில் குண்டு வெடிப்பு சம்பவம் நடப்பத்தற்கு முன் ஃபரிதாபாத்தில் ஒரு பெரிய பயங்கரவாத சதி முறியடிக்கப்பட்டது. டாக்டர் முசாமில் ஷகீல், டாக்டர் அடில் அகமது ராதர் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இவர்களுக்கு டாக்டர் உமருக்கு நெருக்கமான தொடர்ப்பு இருந்துள்ளது. டாக்டர் ஷகீலின் வீட்டிலிருந்து சுமார் 2,900 கிலோ ஐஇடி தயாரிக்கும் பொருட்கள், துப்பாக்கிகள், கைத்துப்பாக்கிகள், டைமர்கள் மற்றும் ரிமோட் கண்ட்ரோல்கள் கைப்பற்றப்பட்டன.

மேலும் டெல்லியில் குண்டு வெடிப்பு சம்பவத்தை நடத்த பயங்கரவாத குழு திட்டமிடப்படவில்லை. உத்தரபிரதேசத்தில் , அயோத்தி கோவிலை டார்கெட் செய்ததாக கூறப்படுகிறது. முன்னதாக தீபாவளி அல்லது ஜனவரி 26ல் குண்டுவெடிப்பு நடத்தவும் சதி திட்டம் தீட்டியது தெரிய வந்துள்ளது.

 இந்த குண்டுவெடிப்பு தொடர்பாக கைதுசெய்யப்பட்ட அனைவரும் ஜெய்ஷ்-இ-முகமது மற்றும் அன்சார் கஸ்வத்-உல்-ஹிந்த் போன்ற பயங்கரவாத அமைப்புகளைச் சேர்ந்தவர்களுடன் தொடர்ப்பில் இருந்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட மருத்துவர்கள் அனைவரும்,  ஃபரிதாபாத்தை சேர்ந்தவர்கள் என கூறப்படுகிறது. இதனால், அவர்கள் அங்குள்ள ஒரு பகுதியை பயங்கரவாத குழு  இடமா  மாற்றியதாக என்.ஐ. ஏ விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதனைத் தொடர்ந்து டெல்லியில் வெடித்த காரில் டாக்டர் உமர் முகமது தனியாக இருந்ததாக சிசிடிவி காட்சிகள் வெளியாகினர். இந்த சம்பவத்தில் உமர் உயிரிழந்துவிட்டை உறுதி செய்ய டாக்டர் உமர்-உன்-நபியின் தாயாரின் டிஎன்ஏ மாதிரிகளை, குண்டுவெடிப்பு நடந்த காரில் இருந்து மீட்கப்பட்ட எலும்புகள் மற்றும் பற்களின் டிஎன்ஏ மாதிரிகள் எடுத்து பரிசோதனைக்கு அனுப்பட்டது. அதில், இருவரின் டிஎன்ஏ மாதிரிகள் முழுமையாக ஒத்துப்போனது.

குண்டுவெடிப்புக்குப் பிறகு டாக்டர் உமரின் கால் ஸ்டீயரிங் மற்றும் ஆக்ஸிலரேட்டருக்கு இடையில் சிக்கிக்கொண்டது விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த விவரங்கள் உமர் காரை ஓட்டிச் சென்றது என்பதை தெளிவுபடுத்துகின்றன. மேலும் இறந்தது உமர்தான் என்பதை அதிகாரிகள் உறுதி செய்தனர்.

உமர் நபியின் குடும்பத்தினர், அவர் பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளார் என்பதை நம்பாமல் உள்ளனர். உமர் நபியின் மனைவி முசாமில் கூறுகையில், உமர் சிறுவயதில் இருந்தே அமைதியாக இருந்தார் சில நண்பர்கள் மட்டுமே  அவருக்கு உண்டு.  படிப்பில் மட்டுமே கவனம் செலுத்தினார் என்றும், சமீப காலமாக அவர் ஃபரிதாபாத்தில் உள்ள ஒரு கல்லூரியில் ஆசிரியராகப் பணிபுரிகிறார் என்றவர்கள், அவர்  பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபடுவார் என்பது அதிர்ச்சியளிக்கிறது என்று தெரிவித்துள்ளனர்.

தீபாவளி அன்றே வெடிகுண்டு தாக்குதலுக்கு திட்டம்.! விசாரணையில் பயங்கரவாதி டாக்டர் முசம்மில் பகீர் தகவல்…