ஆம் ஆத்மி என்ற கட்சியை ஆரம்பித்து குறுகிய நாட்களில் டெல்லி முதல் –அமைச்சர் நாற்காலி யில் அமர்ந்துள்ளார் , அரவிந்த் கெஜ்ரிவால்.
இவர், சமூக சேவகர் அன்னா ஹசாரேயின் சிஷ்யர் என்பது பலருக்கு தெரிந்திருந்தாலும் நினை வூட்டுவதில் தவறு இல்லை.
சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்னர், ஊழலுக்கு எதிராக அன்னா ஹசாரே, டெல்லி ராம்லீலா மைதானத்தில் தான் முதன் முறையாக பெருங்கூட்டத்தை அழைத்து குரல் எழுப்பினார். ஊழலுக்கு எதிரான அந்த போராட்டத்தில் அன்னா ஹசரேவுக்கு தளபதியாக இருந்தவர் அரவிந்த் கெஜ்ரிவால்.
கொஞ்ச நாட்களில் கெஜ்ரிவாலுக்கு, அரசியல் ஆசை துளிர் விட்டது. ஆம் ஆத்மி என்ற கட்சியை ஆரம்பித்து டெல்லிக்கு ராஜாவாகி விட்டார். ஆனால் அரவிந்தின் குருவான, ஹசாரே இன்னும் சமூக சேவகர் என்ற நிலையிலேயே இருக்கிறார்.
இந்த நிலையில், அரவிந்த் கெஜ்ரிவால் அரசின் ஊழல்களை எதிர்த்து போராட, அவருக்கு பா.ஜ.க தூண்டில் போட்டுள்ளது.
தூய்மையான அரசியலே எங்கள் நோக்கம் என சொல்லி ஆம் ஆத்மி ஆட்சியை பிடித்தது. ஆனால் அந்த ஆட்சியில் தூய்மை மருத்துக்கூட இல்லை. ஆம் ஆத்மி அரசை எதிர்த்து நாங்கள் போராடப் போகிறோம். அந்த போராட்டத்துக்கு நீங்கள் ( அன்னா ஹசாரே) துணை நிற்க வேண்டும்’’ என அவருக்கு டெல்லி பா.ஜ.க. தலைவர் ஆதேஷ் குப்தா கடிதம் எழுதியுள்ளார்.
சிஷ்யனுக்கு எதிராக , அன்னா ஹசாரே, பா.ஜ.க..வுடன் கை கோர்ப்பாரா என்பது தெரியவில்லை.
-பா.பாரதி.