மும்பை: மகாராஷ்டிரா மாநிலம் ராய்காட் பகுதியில் 5 மாடிகளை கொண்ட அடுக்குமாடி கட்டிடம் திடீரென இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது. இதனுள் சுமார் 200 பேர் வரை சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. இதுவரை 15 பேர் மீட்கப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
மகாராஷ்டிரா மாநிலம் ராய்காட் பகுதி  மஹாத் நகரில் உள்ள 5 தளங்கள் கொண்ட கட்டம் நேற்று இரவு திடீரென இடிந்து விழுந்தது.  விபத்துக்குள்ளான 5மாடி கட்டிடத்தில் 45 குடியிருப்புகள் இருப்ப தாகக் கூறப்படுகிறது.  கட்டிடத்தில்  3 தளங்கள் முற்றிலுமாக திடீரென இடிந்தது.  இந்த கட்டித்திற்குள் ஏராளமானோர் இருந்த நிலையில், கட்டிட இடிபாடுகளில் 200க்கும் அதிகமானோர்  சிக்கி இருக்க வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து தகவல் அறித்த காவல்துறையினர், தேசிய மீட்பு படையினர் விரைந்து வந்து மீட்பு பணிகளை ஈடுபட்டு வருகின்றனர்.  இதுவரை 15 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டிருப்பதாக மாநில அமைச்சர் அதிதி எஸ். தாத்கரே தெரிவித்துள்ளார்.  தொடர்ந்து மீட்பு பணிகள் தீவிரப்படுத் தப்பட்டு வருகிறது.