அகமதாபாத்: கொல்கத்தா அணிக்கெதிரான போட்டியை, 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது டெல்லி அணி. இதன்மூலம், புள்ளிப் பட்டியலில் 2வது இடத்திற்கு முன்னேறியது.

முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா அணி, 20 ஓவர்களில் 154 ரன்களை சேர்த்தது. அந்த அணியின் ரஸ்ஸல், அதிகபட்சமாக 45 ரன்கள் அடித்தார்.

பின்னர், சற்று எளிய இலக்க‍ை நோக்கி களமிறங்கிய டெல்லியின் வெற்றியை, துவக்க வீரர் பிரித்விஷாவே உறுதிசெய்துவிட்டார்.

அவர், 41 பந்துகளை மட்டுமே சந்தித்து, 3 சிக்ஸர்கள் & 11 பவுண்டரிகளுடன், 82 ரன்களை விளாசினார். இதனால், மற்ற பேட்ஸ்மென்களுக்கு எந்தப் பிரச்சினையுமே இல்லாமல் போய்விட்டது. ஷிகர் தாவன் 46 ரன்களை அடித்தார்.

முடிவில், 16.3 ஓவர்களிலேயே, 3 விக்கெட்டுகள் மட்டுமே இழந்த டெல்லி, 156 ரன்களை எடுத்து வென்றது. ரன்ரேட் அடிப்படையில், பெங்களூரு அணியை முந்தி, புள்ளிப்பட்டியலில் 2ம் இடத்திற்கும் சென்றது.