டெல்லி:
தலைநகர் டெல்லியில் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. மாலை 4 மணி நிலவரப்படி அங்கு 40 சதவிகிதம் மட்டுமே வாக்குப்பதிவு நடைபெற்று உள்ளது.
காலை நேரத்தில் சுறுசுறுப்பாக நடைபெற்ற வாக்குப்பதிவு மதிய நேரத்தில் மந்தமடைந்தது. பிற்பகலில் மீண்டும் சுறுசுறுப்பு அடையும் என எதிர்பார்த்த நிலையில், தொடர்ந்து மந்தமாகவே நடைபெற்று வருகிறது.
முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, புதுடெல்லி தொகுதியில் உள்ள காமராஜ் லேன் வாக்குச் சாவடியில் தனது வாக்கினை பதிவு செய்தார்.
சாதாரண மாநிலங்களிலேகூட 60 சதவிகிதம் முதல் 80 சதவிகிதம் வரை வாக்குப்பதிவுகள் நடைபெற்று வரும் நிலையில், தலைநகர் டெல்லியில் இதுவரை சுமார் 40 சதவிகிதம் மட்டுமே வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கடந்த 2015ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலின்போது டெல்லியில் 67.12 சதவிகிதம் வாக்குப்பதிவு நடைபெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.