டெல்லி:

டெல்லி சட்டமன்றத்திற்கு கடந்த 8ம் தேதி தேர்தல் நடைபெற்றது. இன்று  வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. இதில் 50க்கும் மேற்பட்ட இடங்களில் கெஜ்ரிவாலின் ஆம்ஆத்மி கட்சி  முன்னிலை வகித்து வருகிறது. இதன் காரணமாக அங்கு மீண்டும் ஆட்சியை கைப்பற்றுகிறது.

70 தொகுதிகளைக் கொண்ட  டெல்லியில் ஆட்சியை பிடிக்க ஆம்ஆத்மி, காங்கிரஸ், பாரதிய ஜனதா கட்சிகளுக்கு இடையே மும்முணை போட்டி நடைபெற்றது. இந்த தேர்தலில் மொத்தமுள்ள 70 தொகுதிகளில்  762 வேட்பாளா்கள் களத்தில் இருந்தனர்.

13,750 வாக்குச்சாவடிகளில் வாக்குகள்  பதிவாகின. முதன்முறையாக இந்த தேர்தலில்  முதல் தலைமுறை யைச் சேர்ந்த 2லட்சத்துக்கு 32ஆயிரத்து  815பேர் தான் வெற்றியை முடிவு செய்யும் சூழல் இருப்பதாக அன்றே பத்திரிகை.காம் இணையதளம் தெரிவித்திருந்தது.

அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆத்ஆத்மி கட்சிக்கு அங்குள்ள இளந்தலைமுறையினர் இடையே செல்வாக்கு இருந்து வந்த நிலையில், தற்போதைய தேர்தல் முடிவுகளும் அதையே பிரதிபலித்து வருகின்றன.

அதன்படி, இன்று காலை வாக்குகள் எண்ணிக்கை தொடங்கியதும் ஆம்ஆத்மி கட்சியை முன்னிலை வகித்து வருகின்றன. தொடக்கத்தில் எண்ணப்பட்ட  தபால் வாக்குகளில் ஆம் ஆத்மி 9 இடங்களிலும், பாஜக 4 இடங்களிலும் முன்னிலையில் இருக்கிறது.

காலை 9.30 மணி நிலவரப்படி, ஆம்ஆத்மி கட்சி 53 இடங்களிலும், பாஜக 17 இடங்களிலும் முன்னிலை வகித்து வருகின்றன. காங்கிரஸ் பெரும் தோல்வியை நோக்கி சென்றுகொண்டிருக்கிறது… பெரும்பான்மையை தாண்டி ஆம்ஆத்மி முன்னிலையில் இருப்பதால், அங்கு மீண்டும் ஆம்ஆத்மி ஆட்சியே ஏற்படுவது உறுதியாகி உள்ளது.