டில்லி
ஊரடங்கு முடிந்த பிறகு டில்லி விமான நிலையத்தின் மூன்றாம் முனையத்தில் இருந்து பயணிகள் விமானங்கள் இயங்க உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கொரோனா பாதிப்பைக் கட்டுப்படுத்த கடந்த மார்ச் மாதம் 25 முதல் ஊரடங்கு அமலில் உள்ளது இருமுறை நீட்டிக்கப்பட்ட ஊரடங்கு வரும் மே மாதம் 19 ஆம் தேதி வரை அமலில் இருக்கும். அதுவரை தரை, விமான மற்றும் ரயில் பயணங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இன்று விதிகள் தளர்த்தப்பட்டு தனியார் வாகனங்களின் தரை வழிப்பயணம் தீவிர கட்டுப்பாடுகளுடன் அனுமதிக்கப்பட்டுள்ளது.
ஊரடங்கு முடிந்த பிறகு மீண்டும் பயணிகள் விமானப் பயணம் தொடங்க தேவையான நடவடிக்கைகள் விமான நிலையங்களில் தொடங்கி உள்ளன. அவ்வகையில் டில்லி விமான நிலையத்தில் மூன்றாம் முனையத்தில் இருந்து விமானங்கள் இயங்கும் என தக்வலக்ள் தெரிவிக்கின்றன. இதனால் ஒரே இடத்தில் கூட்டம் கூடுவதைத் தவிர்க்க சோதனை மையங்கள் பல இடங்களில் பரவலாக அமைக்கப்பட்டு வருகின்றன.
அதைப் போல் உணவு மற்றும் பானங்கள் விற்கும் கடைகளும் ஒரே இடத்தில் அமைத்தால் அதிக கூட்டம் கூடும் என்பதால் அவற்றைப் பல இடங்களில் பரவலாக அமைக்கும் பணிகள் நடை பெறுகின்றன. மேலும் அனைத்து உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுப் பயணிகளின் லக்கேஜுகள் சோதிக்க அல்டிரா வயலட் கிருமி நாசினி பாதைகள் அமைக்கப்பட்டுள்ளன.
அதைப்போல் விஸ்தாரா மற்றும் இண்டிகோ விமானப் பயணிகள் கதவு எண் 1 மற்றும் இரண்டின் வழியாக மட்டுமே விமான நிலையத்துக்குள் நுழைய வேண்டும். ஏர் ஏசியா இந்தியா மற்றும் ஏர் இந்தியா பயணிகளுக்கு 3 மற்றும் 4 எண் கதவுகள் ஒதுக்கபட்டுள்ள்ளன. இதைப் போல் ஸ்பஸ் ஜெட் மற்றும் கோ ஏர் பயணிகள் ஐந்தாம் எண் கதவைப் பயன்படுத்த வேண்டும். சர்வதேச விமான நிறுவன பயணிகள் 6, 7 மற்றும் 8 ஆம் எண் கதவுகளைப் பயன்படுத்த வேண்டும்.