சென்னை: பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய பரங்கிமலை- வேளச்சேரி இடையே நாளை (April 10) பறக்கும் ரெயில் சேவை தொடங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. தண்டவாளப் பாதுகாப்பு பரிசோதனையின்போது, சில தவறுகள் காணப்பட்டதாகவும், அதனால், மேலும் சில பணிகளை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டு உள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில், வேளச்சேரி-பரங்கிமலை வழித்தடத்தில் கடந்த 5-ந்தேதி டெல்லியில் இருந்து ரெயில்வே பாதுகாப்பு கமிஷனர் ஜனக்குமார் கர்க் தலைமை யில் வந்த குழுவினர் ரெயிலை இயக்கியும், டிராலிகளில் பயணித்தும் தண்டவாளப் பாதுகாப்பு நிலை குறித்து ஆய்வு மேற்கொண்டனர். தொடர்ந்து, பாதுகாப்பு சான்றிதழ் வழங்கப்பட்டதும் இந்த வழித்தடத்தில் ரெயில் சேவை தொடங்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். ஆனால், தற்போது இந்த வழித்தடத்தில் தண்டவாளப் பாதுகாப்பு பரிசோதனை முடிந்த நிலையில், ரெயில் இயக்க அனுமதிச்சான்று கிடைக்கவில்லை எனவும் தண்டவாளத்தில் சில பணிகள் மேற்கொள்ளவேண்டும் என பரிசோதனைக்கு வந்த குழுவினர் ஆலோசனை வழங்கியுள்ளதாகவும் தெரிகிறது. அந்த பணிகள் முடிவடைந்த பின் பரங்கிமலை-வேளச்சேரி இடையே பறக்கும் ரெயில் சேவை தொடங்கும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சென்னை எழும்பூர் ரெயில் நிலைய மறுசீரமைப்பு பணி காரணமாக கடந்த மாதம் 20-ந்தேதி முதல் மின்சார ரெயில் சேவைகள் குறைக்கப்பட்டுள்ளதால் பயணிகள் பெரும் சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர். இதையடுத்து ரசியல்வே நிர்வாகம் இலவச பேருந்துகளை இயக்கி வருகிறது. இருந்தாலும் தடையற்ற பயணத்திற்கு ரயில் சேவையே சிறந்தது என்பதால், பயணிகள் ரயில் சேவையையே அதிகம் எதிர்பார்க்கின்றனர்.
இதையடுத்து, வேளச்சேரி-பரங்கிமலை இடையே பறக்கும் ரெயில் சேவையை தொடங்கினார், தாம்பரத்தில் இருந்து கடற்கரை வரை வரும் பயணிகள் இந்த ரயில் சேவையை பயன்படுத்த முடியும். அதனால், அந்த ரயில் சேவையை இயக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அதன்படி நாளை (10-ந் தேதி) முதல் அந்த வழித்தடத்தில் ரெயில் சேவை தொடங்க இருப்பதாகவும் இதற்கு இடையே ரெயில்வே பாதுகாப்பு கமிஷனர் பாதுகாப்பு சோதனை மேற்கொள்ள இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால், சோதனையில் சில அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டு உள்ளதால், அவை சரிசெய்த பிறகே ரயில் சேவை தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
[youtube-feed feed=1]