சென்னை:

சொத்து குவிப்பு வழக்கில் தீர்ப்பு வெளி வரவுள்ள நிலையில் சசிகலாவை ஆட்சி அமைக்க அழைக்காமல் கவர்னர் வித்யாசாகர் ராவ் காலம் தாழ்த்துவது சட்டவிரோதமல்ல என்று முன்னாள் அட்டர்னிஜெனரல் சோலி சொராப்ஜி கூறியுள்ளார்.

இது குறித்து அவர் தெரிவித்ததாவது:

சொத்து குவிப்பு வழக்கில் இந்த வாரத்தில் தீர்ப்பு வெளிவரவில்லை. அதனால் கவர்னர் சசிகலாவை ஆட்சி அமைக்க அழைக்க வேண்டும் என்பதே சரியானது.

தீர்ப்பு இன்னும் ஒரு சில நாட்களில் வெளியாக வாய்ப்பு உள்ளது. சசிகலா மேல்முறையீட்டு மனு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. அதனால் கவர்னர் உடனடியாக சசிகலாவை ஆட்சி அமைக்க அழைக்காமல் காலம் தாழ்த்துவது சரியானதே.

கவர்னர், சசிகலாவின் கோரிக்கையை நிராகரிக்கவில்லை. எனவே அவர் தாமதப்படுத்துவது சட்ட விரோதமல்ல என்று அவர் தெரிவித்துள்ளார்.