டில்லி:
இந்திய ராணுவ அமைச்சக இணையதளத்தை மர்ம ஆசாமிகள் முடக்கியுள்ளனர். அதில் சீன மொழியில் வார்த்தைகள் இடம்பெற்றுள்ளதால் இந்த சதி செயலுக்கு பின்னார் சீனாவுக்கு தொடர்பு இருக்குமோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
இது தொடர்பாக ராணுவ அமைச்சகம் சார்பில் டுவிட்டரில் ஒரு பதிவு வெளியிடப்பட்டுள்ளது. அதில், ‘‘இணையதளம் முடக்கப்பட்டது குறித்து ஆய்வு நடத்தி வருகிறோம். உரிய நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்று தெரிவிக்கப்ப்டடுள்ளது. இது குறித்து விசாரிக்க தேசிய தகவல் அமைப்பை ராணுவ அமைச்சகம் கேட்டுக் கொண்டுள்ளது.
இது குறித்து ராணுவ அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் டுவிட்டரில், ‘‘ இணையதளம் விரைவில் மீட்கப்பட்டு செயல்பட தொடங்கும். இணைய தளம் முடக்கப்பட்டதை தொடர்ந்து நடவடிக்கைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. எதிர்காலத்தில் இதுபோன்ற செயல்கள் நடக்காமல் தடுக்கும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்படும்’’ என்று தெரிவித்துள்ளார்.