அதிமுக கூட்டணியிலிருந்து வெளியேறிய அல்லது வெளியேற்றப்பட்ட தேமுதிகவிற்கு, மய்ய நடிகரின் கட்சியிலிருந்து வெளிப்படையான அழைப்பு சென்றது.

ஆனால், அதை அந்தக் கட்சி கண்டுகொள்ளவில்லை. மாறாக, தினகரன் முகாம் பக்கமாக திரும்பியது தேமுதிக. தங்களை அவமானப்படுத்தி வெளியேற்றிய அதிமுகவை வீழ்த்துவது என்ற குறிக்கோளில் தேர்தல் களமாடிவரும் அமமுகவுடன் இணைந்து தேர்தலை சந்திப்பதையே அக்கட்சி விரும்பியது.

தேமுதிகவுடன் கூட்டணிப் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக, டிடிவி தினகரனே வெளிப்படையாக அறிவித்தார்.

கூட்டணியிலிருந்து வெளியேறியவுடன், தேமுதிகவின் சுதீஷ் மற்றும் விஜய பிரபாகரன் இருவரும், அதிமுகவை வீழ்த்துவதே எங்களின் லட்சியம் என்றெல்லாம் முழங்கினார்கள். அதில், விஜய பிரபாகரன், திமுக வென்றால் எங்களுக்கு மகிழ்ச்சியே என்றும் குறிப்பிட்டார்.

ஆக, அமமுக – தேமுதிக கூட்டணி உறுதியாகுமா? அது எந்தளவிற்கு அதிமுகவை வீழ்த்துவதற்கு உறுதியாக களமாடும்? என்பதைப் பொறுத்திருந்து பார்க்கலாம்.