சென்னை:
மத நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் வகையில் சமூக வலைத்தளங்களில் அவதூறு பரபரப்பட்ட நிலையில், இது தொடர்பான வழக்கில் மத்திய அரசு பதில் அளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கறுப்பர் கூட்டம் என்ற அமைப்பு கந்தசஷ்டி கவசம் குறித்து அவதூறாக வீடியோ வெளியிட்ட விவகாரம் தமிழகத்தில் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இதையடுத்து, மத நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் வகையில் சமூக வலைத்தளங்களான யூ-டியூப், ஃபேஸ் புக், ட்விட்டர் நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், மத நல்லிணக் கத்தை சீர்குலைக்கும் சமூக வலை தளங்களுக்கு தடை விதிக்க வேண்டும் என மனுவில் கோரிக்கை வைக்கப்பட்டது.
இந்நிலையில், வழக்கறிஞர் சார்லஸ் அலெக்சாண்டர், சமூக வலைத்தளங்களில் அவதூறுகளை தடுக்கக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அவர் தனது மனுவில், மதரீதியான அவதூறுகளை தடுக்க தவறிய யூடியூப், பேஸ்புக், டுவிட்டர் ஆகிய சமூக வலைத்தளங்கள் மீதும், கறுப்பர் கூட்டம் சுரேந்திரன் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியுள்ளார்.
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனு தொடர்பாக மத்திய அரசு 3 வாரங்களில் பதிலளிக்கும்படி நோட்டீஸ் அனுப்ப உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு வழக்கு விசாரணை ஒத்தி வைக்கப்பட்டது.