மும்பை:

சோனியாகாந்தி குறித்து அவதூறாக பேசியதால், பத்திரிகையாளர் அர்னாப் கோஸ்வாமி மீது மும்பை உள்பட நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

மும்பையில் தொடரப்பட்ட வழக்கின் விசாரணை தொடர்பாக இன்று காலை 11 மணிக்கு விசாரணைக்கு ஆஜராகுமாறு மும்பை காவல்நிலையம் அவருக்கு சம்மன் அனுப்பி இருந்தது. அதைத்தொடர்ந்து, இன்று காலை  காவல் நிலையத்தில் அர்னாப் கோஸ்வாமி ஆஜரானார்.

ரிபப்ளிக் தொலைக்காட்சி சேனல் ஆசிரியர் அர்னாப் கோஸ்ஸாமி, தொலைக்காட்சி விவாதத்தின் போது, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி குறித்து அவதூறாக பேசினார். இதையடுத்து, அவர்மீது மகாராஷ்டிரா, சத்திஸ்கர், மத்தியபிரதேசம், ராஜஸ்தான உள்பட பல மாநிலங்களில் காங்கிரஸ் கட்சியினர் புகார் கொடுத்தனர்.

இதை எதிர்த்து உச்சநீதி மன்றத்தில் அர்னாப் கோஸ்வாமி தொடர்ந்து வழக்கில், மும்பை காவல்துறை விசாரணைக்கு ஆஜர் ஆக வேண்டும் என்று உத்தரவிடப்பட்டதும், அவரை கைது செய்ய தடை விதித்து.

இந்த நிலையில்,  ர்னாப் கோஸ்வாமி விசாரணைக்காக மும்பை காவல்நிலையத்தில் இன்று ஆஜரானார்.  மும்பையில் உள்ள என்எம் ஜோஷி காவல்நிலையத்தில் ஆஜரான அவரிடம், காவல்துறை அதிகாரிகள்  பல்வேறு கேள்விகளை எழுப்பியதாகவும், அதற்கு அவர் பதில் அளித்ததாகவும் கூறப்படுகிறது.

முன்னதாக செய்தியாளர்களை சந்தித்த அர்னாப் கோஸ்வாமி,  “உண்மை என் பக்கத்தில் உள்ளது; நாங்கள் வெல்வோம்” என்று தெரிவித்தார்.