சென்னை:

முதல்வர் எடப்பாடி குறித்து அவதூறாக பேசியதாக திமுக எம்.பி. கனிமொழிமீது முதல்வர் சார்பில் அவதூறு வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கின் விசாரணைக்கு சென்னை உயர்நீதி மன்றம் தடை விதித்துள்ளது.

கடந்த 2018ம் ஆண்டு திண்டிவனத்தில் நடந்த திமுக ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட திமுக எம்.பி. கனிமொழி, கூட்டத்தில், தமிழக  முதல்வர் எடப்பாடி மற்றும்  தமிழக அரசு குறித்து அவதூறாக பேசியதாக  வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கு  விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. வழக்கின் விசாரணைக்கு வரும் ஜூன்4ம் தேதி  ஆஜராக வேண்டும் என்று விழுப்புரம் நீதிமன்றம் சம்மன் அனுப்பியிருந்தது.

இதை எதிர்த்து கனிமொழி சார்பில் சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிமன்றம், , இந்த வழக்கில் கனிமொழி நேரில் ஆஜராக விலக்கு அளித்தும்  விழுப்புரம் நீதிமன்ற விசாரணைக்கும்  தடை விதித்துள்ளது.