புதுடெல்லி:
தேமுதிக தலைவர் விஜயகாந்த்மீது தொடரப்பட்ட அவதூறு வழக்குக்கு ஜாமின் கோரி உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவின் அடுத்தக்கட்ட விசாரணை இன்று நடைபெற்றது.
jaya
அப்போது, உச்ச நீதிமன்ற நீதிபதிகள், தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு கடுமையாக கண்டனம் தெரிவித்தனர்.
       பொது வாழ்வில் இருப்பவர்கள் மாற்று கருத்துகளை ஏற்று கொள்ளவேண்டும் , அவதூறு வழக்குகள் மூலம் மாற்று கருத்துகளை நெரிக்க கூடாது. அரசியல் பழிவாங்களுக்காக அரசு இயந்திரத்தை பயன்படுத்தக்கூடாது.  தமிழகம் போல் வேறு எந்த மாநிலமும் நிர்வாக இயந்திரத்தை தவறாக பயன்படுத்தியதில்லை.  நிர்வாகத்தில் கவனம் செலுத்துவது நல்லது. பொதுவாழ்க்கையில் இருப்பவருக்கு சகிப்பு தன்மை வேண்டும் .  விமர்சனங்களை ஏற்று கொள்ளும் பக்குவத்தை  பொது வாழ்க்கையில் இருப்பவர்கள் கடைபிடிக்க வேண்டும்.  என்று ஜெயலலிதாவை காட்டமாக விமர்சித்துள்ளது உச்ச நீதிமன்றம்
ஏற்கனவே விஜயகாந்த்மீது தொடரப்பட்ட அவதூறு வழக்கில், திருப்பூர் கோர்ட்டு அவருக்கு கைது வாரண்ட் பிறப்பித்தது. அதற்கு தடை கோரி விஜயகாந்த் தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்டது.
supreme
அப்போது சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள்,   தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கும், தமிழக அரசுக்கும்  கண்டனம் தெரி வித்ததோடு, எதற்கு அரசை விமர்சித்தால் அவதூறு வழக்கு தொடுக்கிறீர்கள் மேலும் இதற்காக அரசு வழக்கறிஞரை ஏன் பயன்படுத்துகிறீர்கள், அரசியல் கட்சி தலைவர்கள் மீது இதுவரை தொடரப்பட்ட அவதூறு வழக்குகள் பற்றிய விவரங்களை தெரிவிக்க கோரினர். இதையடுத்து, தமிழகஅரசு கடந்த 5 ஆண்டுகளில் 213 அவதூறு வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக  சுப்ரீம் கோர்ட்டில் அறிக்கை தாக்கல் செய்தது குறிப்பிடத்தக்கது.
இதன் அடுத்த கட்ட விசாரணை செப்டம்பர் 21ந்தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.