
பாலிவுட் நடிகை தீபிகா படுகோனே – ரன்வீர் சிங் தம்பதியினர் தங்களது முதலாம் ஆண்டு திருமண நாளை முன்னிட்டு திருப்பதியில் சாமி தரிசனம் செய்தனர்.
இருவருக்கும் கடந்த ஆண்டு நவம்பர் 14 ஆம் தேதி இத்தாலியில் திருமணம் நடைபெற்றது.
திருப்பதி கோவிலில் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் தீபிகா. அத்துடன் “எங்களது முதலாவது திருமண நாளை முன்னிட்டு, வெங்கடாஜலபதியிடம் ஆசி பெற்றோம். உங்களது அளவு கடந்த அன்பு, ஆசி மற்றும் வாழ்த்துக்களுக்கு நன்றி” என பதிவிட்டுள்ளார்.
Patrikai.com official YouTube Channel