அனைவருக்கும் இனிமையான தீபாவளி திருநாள் வாழ்த்துகள்
இம்முறை, Deepawali Wishesஐ தமிழில் சொல்லப் போகிறீர்களா?
அப்படியானால், தீபாவளி வாழ்த்துகள் என்று சொல்லுங்கள். வாழ்த்துக்கள் என்று அல்ல.
ஏன்?
வாழ்த்துகள், வாழ்த்துக்கள் – எது சரி?
க், ச், ட், த், ப், ற் – இந்த ஆறு எழுத்துகளுக்குப் பின்னால் வருகிற உகார (த+உ = து, க+உ = கு, ப+உ = பு) எழுத்தைத் தொடர்ந்து புள்ளி வைத்த எழுத்து வரப்படாது. இது விதி.
இந்த விதிப்படி பார்த்தால், வாழ்த்து என்ற சொல்லின் பன்மை வாழ்த்துகள். வாழ்த்துக்கள் அல்ல.
எழுத்து – எழுத்துகள், கணக்கு – கணக்குகள்… இதுதான் சரி.
வாழ்த்துகிறேன் என்றுதானே எழுதுகிறோம். வாழ்த்துக்கிறேன் என்று இல்லையே?
அனைவருக்கும் இனிமையான, துடிப்பான தீபாவளி வாழ்த்துகள்!