விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் மிஸ்டர் அண்ட் மிசஸ் சின்னத்திரை நிகழ்ச்சியில் பங்கு பெற்றிருக்கும் தீபாவின் பழைய புகைப்படம் ஒன்று இணையத்தில் பரவி வருகிறது.

மாயாண்டி குடும்பத்தார், கடைக்குட்டி சிங்கம் போன்ற பல படங்களில் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்த தீபா, வெப் சீரிஸ்களிலும் நடித்துள்ளார். தற்போது சிவகார்த்திகேயனின் நடிப்பில் விரைவில் வெளியாகவிருக்கும் ‘டாக்டர்’ படத்திலும் நடித்துள்ளார்.

இந்நிலையில் தீபா சங்கரின் பழைய படம் ஒன்று இணையத்தில் பரவி வருகிறது. படத்தில் ஒல்லியாக இருக்கும் அவரைப் பார்த்த ரசிகர்கள், நம்ம தீபா அக்காவா இது? என்று கேட்கின்றனர்.