சென்னை: திருவண்ணாமலை தீபத் திருவிழாவினை முன்னிட்டு சென்னையிலிருந்து திருவண்ணாமலைக்கு இன்று முதல் 3 நாட்கள் சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என்று தென்னக ரயில்வே அறிவித்துள்ளது. மேலும் தாம்பரத்தில் இருந்தும் சிறப்பு ரயில் இயக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. மேலும் சிறப்பு ரயில்கள், பேருந்துகள் இயக்கம் தொடங்கி நடைபெற்று வருகிறது.
சென்னை கடற்கரை -வேலூர் இடையே மின்சார ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இதை திருவண்ணாமலை தீபத்திருவிழாவையொட்டி, திருவண்ணாமலை வரை நீட்டிக்கப்பட்டு இருக்கிறது. அதன்படி இன்றுமுதல் சென்னை கடற்கரையில் இருந்து திருவண்ணாமலை வரை டிசம்பர் 7ஆம் தேதி வரை மூன்று நாட்கள் இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மறு மார்க்கமாக திருவண்ணாமலையிலிருந்து சென்னை கடற்கரைக்கு சிறப்பு ரயில் டிசம்பர் 6ஆம் தேதி முதல் டிசம்பர் 8 தேதி வரை இயக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டு உளளது.
இந்த சிறப்பு ரயில் சென்னை கடற்கரை ரயில் நிலையத்திலிருந்து மாலை ஆறு மணிக்கு புறப்பட்டு திருவண்ணாமலைக்கு நள்ளிரவு 12.05 மணிக்கு சென்றடையும் என்றும், மறு மார்க்கத்தில் காலை 9 மணிக்கு புறப்பட்டு மாலை 3:45 மணிக்கு சென்னை கடற்கரை ரயில் நிலையத்தை வந்தடையும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தாம்பரத்திலிருந்து திருவண்ணாமலைக்கும் சிறப்பு ரயில் இயக்கப்படும் என்றும், இந்த சிறப்பு ரயில் டிசம்பர் 6ஆம் தேதி மற்றும் டிசம்பர் 7ஆம் தேதி ஆகிய இரண்டு தினங்கள் இயக்கப்படும் என்றும் அறிவித்துள்ளது.
ஏற்கனவே சென்னை, புதுச்சேரி, வேலூர், மயிலாடுதுறை, கடலூர் ஆகிய இடங்களில் இருந்து இன்று முதல் 8-ந்தேதி வரை திருவண்ணாமலைக்கு 24 சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுகின்றன.
சென்னை கடற்கரையில் இருந்து இன்று மாலை 6 மணிக்கு புறப்பட்டு வேலூர் வழியாக திருவண்ணாமலைக்கு நள்ளிரவு 12.05 மணிக்கு வருகிறது. இந்த ரெயில் நாளை அதிகாலை 3.45 மணிக்கு புறப்பட்டு காலை 9 மணி அளவில் சென்னை கடற்கரையை சென்றடைகிறது.
புதுச்சேரியில் இருந்து இன்று மாலை 5.45 மணிக்கு புறப்பட்டு விழுப்புரம் வழியாக திருவண்ணாமலைக்கு இரவு 10.30 மணிக்கு வருகிறது. இந்த ரெயில் நாளை அதிகாலை 3.30 மணிக்கு புறப்பட்டு காலை 6.20 மணிக்கு புதுச்சேரியை சென்றடைகின்றது.
நாளை மயிலாடுதுறையில் இருந்து ரெயில் காலை 6 மணிக்கு புறப்பட்டு விழுப்புரம் வழியாக காலை 10.55 மணி அளவில் திருவண்ணாமலைக்கு வருகின்றது. அந்த ரெயில் அன்று மதியம் 12.40 மணி அளவில் புறப்பட்டு மாலை 5.40 மணிக்கு மீண்டும் மயிலாடுதுறையை சென்று அடைகின்றது.
அதேபோல் கடலூர் மாவட்டம் திருபாதிரிப்புலியூரில் இருந்து நாளை இரவு 8.50 மணிக்கு ரெயில் புறப்பட்டு விழுப்புரம் வழியாக இரவு 10.55 மணிக்கு திருவண்ணாமலை வருகை தந்து அங்கிருந்து வேலூரை நள்ளிரவு 12.40 மணி அளவில் சென்றடைகின்றது. மேலும் வேலூரில் இருந்த திருபாதிரிப்புலியூர் செல்லும் ரெயில் 7-ந் தேதி வேலூரில் அதிகாலை 1.30 மணிக்கு புறப்பட்டு அதிகாலை 3 மணி அளவில் திருவண்ணாமலைக்கு வருகிறது.
பின்னர் அங்கிருந்து திருபாதிரிப்புலியூரை காலை 5.40 மணி அளவில் சென்றடைகின்றது. 7-ந்தேதி மயிலாடுதுறையில் இருந்து ரெயில் புறப்பட்டு காலை 6 மணிக்கு விழுப்புரம் வழியாக காலை 10.55 மணி அளவில் திருவண்ணாமலைக்கு வருகின்றது.
அந்த ரெயில் அன்று மதியம் 12.40 மணி அளவில் புறப்பட்டு மாலை 5.40 மணிக்கு மீண்டும் மயிலாடுதுறையை சென்று அடைகின்றது. 7-ந்தேதி திருபாதிரிப்புலியூரில் இருந்து இரவு 8.50 மணிக்கு ரெயில் புறப்பட்டு விழுப்புரம் வழியாக இரவு 10.55 மணிக்கு திருவண்ணாமலை வருகை தந்து அங்கிருந்து வேலூரை நள்ளிரவு 12.40 மணி அளவில் சென்றடைகின்றது. அதேபோல் 7-ந்தேதி சென்னை கடற்கரையில் இருந்து மாலை 6 மணிக்கு புறப்பட்டு வேலூர் வழியாக திருவண்ணாமலைக்கு நள்ளிரவு 12.05 மணிக்கு வருகிறது.
இந்த ரெயில் 8-ந்தேதி அதிகாலை 3.45 மணிக்கு புறப்பட்டு காலை 9 மணி அளவில் சென்னை கடற்கரையை சென்றடைகிறது. புதுச்சேரியில் இருந்து 7-ந்தேதி மாலை 5.45 மணிக்கு புறப்பட்டு விழுப்புரம் வழியாக திருவண்ணாமலைக்கு இரவு 10.30 மணிக்கு வருகிறது. இந்த ரெயில் 7-ந்தேதி அதிகாலை 3.30 மணிக்கு திருவண்ணாமலையில் இருந்து புறப்பட்டு காலை 6.20 மணிக்கு புதுச்சேரியை சென்றடைகின்றது.
மேலும் வேலூரில் இருந்த திருபாதிரிப்புலியூர் செல்லும் ரெயில் 8-ந்தேதி வேலூரில் அதிகாலை 1.30 மணிக்கு புறப்பட்டு அதிகாலை 3 மணி அளவில் திருவண்ணாமலைக்கு வருகிறது. பின்னர் அங்கிருந்து திருபாதிரிப்புலியூரை காலை 5.40 மணி அளவில் சென்றடைகின்றது.
சென்னை புதுச்சேரி விழுப்புரம் வேலூர் பகுதியில் இருந்து சிறப்பு ரெயில்கள் இன்று முதல் இயக்கப்படுகிறது. இதே போல தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து சிறப்பு பஸ்கள் திருவண்ணாமலைக்கு இயக்கப்பட்டன.
தமிழக அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் இன்று முதல் 7-ந் தேதி வரை 3 நாட்கள் 2700 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது. தென் மாவட்டங்களில் இருந்தும் திருவண்ணாமலைக்கு சிறப்பு பஸ்கள் இன்று முதல் இயக்கப்பட்டன விழுப்புரம்-திருவண்ணாமலை வழித்தடங்களில் 317 பஸ்களும், திண்டிவனம்-திருவண்ணாமலை வழித்தடங்களில் 82 பஸ்களும், புதுச்சேரி-திருவண்ணாமலை வழித்தடங்களில் 180 பஸ்களும், திருக்கோவிலூர்-திருவண்ணாமலை வழித்தடங்களில் 115 பஸ்களும், கள்ளக்குறிச்சி-திருவண்ணாமலை வழித்தடங்களில் 200 பஸ்கள் இயக்கப்படுகின்றன.
இந்த சிறப்பு பஸ்களின் இயக்கத்தை முன்னிட்டு முக்கிய பஸ் நிலையங்களில் பயணிகள் அடர்வு குறையும் வரை தேவைக்கேற்ப பஸ்களை ஏற்பாடு செய்திடவும், பஸ் இயக்கத்தை மேற்பார்வை செய்திடவும் அலுவலர்கள் பணியமர்த்தப்பட்டு உள்ளனர்.