சென்னை,
அதிமுக கொடி, இரட்டை இலை சின்னத்துக்கு உரிமை கோரி தீபா அணி, தலைமை தேர்தல் கமிஷனிடம் ஆவணம் தாக்கல் செய்துள்ளது.
தலைமை தேர்தல் கமிஷனால் முடக்கி வைக்கப்பட்டுள்ள இரட்டை இலை சின்னத்தை மீட்க ஓபிஎஸ் அணியும், சசிகலா அணியும் மாறி மாறி லட்சக்கணக்கான பிரம்மான பத்திரங்களை தாக்கல் செய்துள்ள நிலையில்,
தற்போது ஜெயலலிதாவின் அண்ணன் மகளான தீபா, தனது அணி சார்பில் தலைமை தேர்தல் கமிஷனிடம் அதிமுக கொடி, இரட்டை இலை சின்னத்தைக்கேட்டு ஆவணங்களை தாக்கல் செய்துள்ளார்.
இதுகுறித்து ஜெ தீபா அணி எம்ஜிஆர் அம்மா தீபா பேரவை விடுத்துள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது,
30-06-2017 இன்று தலைமைக் கழகத்தின் சார்பில் ஜெ தீபா ஆலோசனைப்படி கழக உயர்மட்டக்குழு உறுப்பினர்கள் வழக்கறிஞர் செ பசும்பொன்பாண்டியன் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ப சரசுவதி E c r என் ராமச்சந்திரன் கடலூர் வழக்கறிஞர் Gs வெங்கட் ஆகியோர் டெல்லியில் உள்ள தலைமை தேர்தல் ஆணையர் அலுவலகத்தில் ஜெ தீபா கொடுத்தனுப்பிய புகார் கடிதத்தை கொடுக்கிறார்கள்.
அந்த கடிதத்தில், அஇஅதிமுக பொதுச்செயலாளர் தேர்தலை தேர்தல் ஆணையமே முன்னின்று நடத்த கோரியும், இரட்டை இலை சின்னம் அஇஅதிமுக கட்சியின் கொடியையும் பயன்படுத்த உரிமை கோரியும், சுமார் ஐந்து லட்சம் கூடுதல் ஆவனங்கள் தாக்கல் செய்யப்பட இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.
மேலும், ஜெ தீபா அம்மா பாரதப்பிரதமர் அவர்களுக்கு எழுதிய கடிதம் உயர்மட்டக்குழு உறுப்பினர்களால் பாரதப்பிரதமர் அலுவலகத்தில் சமர்ப்பிக்கப்பட இருப்பதாகவும், பின்னர் டில்லியில் தலைமை தேர்தல் அலுவலகம் முன்பு பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு நடைபெறும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது