டில்லி,

பெண்ணின் வயிற்றில் வளரும் கரு குறைபாடாக இருப்பதால், அந்த கருவை கலைக்கலாம் என்று உச்சநீதி மன்றம் தீர்ப்பு அளித்து உள்ளது.

கருவுற்ற பெண்கள்  கருவைச் சுமக்கும் காலத்தில் கருவோடு சேர்ந்து தாயின் கற்பனைகளும் வளர்கின்றன. 36 முதல் 38 வாரம் குழந்தையின் ஆரோக்கிய வளர்ச்சிக்கு போதுமான காலம்.

துரதிருஷ்டவசமாக வளரும் கருவில் குறைபாடுகள் ஏற்பட்டால் அதை கலைக்க முற்படுவதும் உண்டு.

அதுபோல குறைபாடுடன் பெண்ணின் வயிற்றினுள் உள்ள கருவினுள்  உள்ள 6 மாத கருவைக் கலைக்க அனுமதிக்க கோரி புனேவை சேர்ந்த பெண் ஒருவர் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.

அந்த தாக்கல் செய்த மனுவில்,  தனது வயிற்றில் வளரும் கருவிற்கு 24 வாரம் ஆகியும் அதாவது 6 மாதம் ஆன பின்பும் மண்டை ஓடு வளரவில்லை. இதன் காரணமாக 10 மாதம் கழித்து அந்த குழந்தை பிறந்ததாலும் மரணத்தையே தழுவும். எனவே, அந்த 6 மாத கருவை கலைக்க அனுமதிக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், கருவின் வளர்ச்சி குறித்து, மருத்துவர்களின் அறிக்கையை கேட்டிருந்தது.  அதைத்தொடர்ந்து, தாக்கல் செய்யப்பட்ட மருத்துவர்களின் அறிக்கை அடிப்படையில்,  கருவை கலைக்க உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கி உத்தரவிட்டது.