டில்லி

ந்திய பொருளாதாரத்தில் தற்போது நிகழ்ந்துள்ள சரிவுகளும் அதற்கான காரணங்கள் குறித்த விளக்கங்களை இங்கு பார்ப்போம்

பொருளாதாரத்தில் ஆசியாவின் மூன்றாவது பெரிய நாடு என இந்தியா கூறப்படுகிறது. ஆனால் தற்போது இந்தியாவின் பொருளாதாரத்தில் ஏராளமான சரிவுகள் ஏற்பட்டுள்ளன என்பது கண்கூடாக தெரிகின்றன. இவைகள் மிகவும் தீவிரமானவை என்பதால் இவைகளை அலட்சியம் செய்ய முடியாது. அத்துடன் இவைகளை பற்றி தெரிந்துக் கொள்வதன் மூலம் இனி வரும் காலத்தில் பொருளாதார முன்னேற்றம் எவ்வாறு அமையும் என்பதையும் அறிந்துக் கொள்ள முடியும்.

1. நுகர்வோர் சந்தையில் விற்பனை மிகவும் குறைந்து வருகிராது. உதாரணமாக பங்குச் சந்தை தரகு நிறுவனமான கோடாக் நிதி நிறுவனம், “சமீபகாலமாக நுகர்வோர் பொருட்கள் உற்பத்தி நிறுவன பங்குகள் விலையில் கடும் சரிவு ஏற்பட்டுள்ளது. இந்திய நுகர்வோர் சந்தையில் முதல் இடத்தில் இருக்கும் பொருட்களின் தயாரிப்பாளரான இந்துஸ்தான் யுனிலீவர் நிறுவனத்தின் பங்குகளின் விலை முந்தைய விலையை விட கடந்த கால ஆண்டில் கணிசமாக குறைந்துள்ளது.” என தெரிவித்டுள்ளது. நுகர்வோர் பொருட்கள் விற்பனையில் ஏற்பட்ட சரிவே இந்த பங்குகள் விஅல் சரிவுக்கும்காரணமாகும். எனவே முதல் படியாக நுகர்வோர் சந்தை முன்னேற்றத்தை கவனிக்க வேண்டும்.

2. நுகர்வோர் சந்தைக்கு அடுத்தபடியாக வாகன சந்தையும் சரிவை சந்தித்து வருகிறது. கடந்த ஏப்ரல் மாதத்தில் மாருதி நிறுவனம் 18.7% மற்றும் ஹுண்டாய் மோட்டார் நிறுவனம் 10.1% வீழ்ச்சியை விற்பனையில் சந்தித்துள்ளது. அது கடந்த 6 மாதங்களில் மட்டுஇன்றி இரு சக்கர வாகனங்களின் விற்பனை 15.8 லட்சம் குறைந்துள்ளன. கடந்த வருடம் இதே கால கட்டத்தில் இந்த விற்பனை 18.8 லட்சம் அதிகரித்திருந்தது. அரசு அடுத்து கவனிக்க வேண்டியது வாகனச் சந்தை ஆகும்.

4. அரசின் செலவினங்களைப் பொறுத்து நாட்டின் பொருளாதார நிலை மாறும் என்பது அனைவரும் அறிந்ததே. தற்போதுள்ள நிலையில் அரசு தனது செலவினங்களை குறைக்கும் நிலையில் உள்ளன. இதனால் சாலை அமைப்பு போன்ற பல இனங்கள் பாதிப்படையும். இதன் தாக்கம் நுகர் பொருள் விலை, சாலை பணியாளர்கள் வேலை இழப்பு, உள்ளிட்டவைகளில் எதிரொலிக்கும். அத்துடன் நுகர்வோர் சந்தை வீழ்ச்சியடைய இது மேலும் வழி வகுக்கும்.

5. கிராமப்புற பொருளாதாரம் மிகவும் நம்பி உள்ள விவசாயத்துறை தற்போது மிகவும் பின்னடைந்துள்ளது. விவசாயப் பொருட்கள் விலை குறைவு மற்றும் நீர் வசதி குறைவு ஆகியவை விவசாயிகளை மிகவும் வாட்டி வருகிறது. மத்திய அரசால் அறிவிக்கப்பட்ட குறைந்த பட்ச கொள்முதல் விலை விவசாயிகளுக்கு சிறிதும் பயன் அளிக்கவில்லை. லடந்த சில வருடங்களாக விவசாயிகளின் வருமானம் குறைந்து வருகிறது. கடந்த 5 வருடங்களில் மொத்த உள்நாட்டு உற்பத்தி 2.9% மட்டுமே அதிகரித்துள்ளது. இதற்கு முந்தைய ஐந்து வருடங்களில் இது 4.3% அதிகரித்திருந்தது. அது மட்டுமின்றி விவசாயப் பொருட்கள் ஏற்றுமதி 39 பில்லியன் டாலராக குறைந்துள்ளது.

5. அடுத்தபடியாக உற்பத்தி துறை மிகவும் சரிந்துள்ளது. சென்ற வருடம் ஏப்ரல் மாதம் தொழிற்சாலை உற்பத்தி 6.9% வளர்ந்துள்ள நிலையில் தற்போது அந்த வளர்ச்சி வெறும் 0.1% ஆக உள்ளது. கடந்த 20 மாதங்களில் இவ்வளவு குறைவு எப்போதும் ஏற்பட்டதில்லை. இதற்கு முன்பு 2017 ஜூன் மாதத்தில் 0.3% வளர்ந்திருந்தது. வரும் கணக்கு ஆண்டில் இந்த குறைந்த வளர்ச்சியின் தாக்கம் பொருளாதாரத்தை பெருமளவு பாதிக்கும்.

6. வேலை இல்லா திண்டாட்டத்தில் சிறிதும் முன்னேற்றம் காணப்படாமல் உள்ளது. சொல்லப்போனால் கடந்த மாதம் வேலை அற்றோர் எண்ணிக்கை 7.6% அதிகரித்துள்ளது. இது அக்டோபர் 2016 க்குப் பின் வேலை இன்மை மிகவும் அதிகரித்துள்ள மாதமாகும். அதை போல சரியான பணி இல்லாமல் பலரும் குறைவான வருமானம் உள்ள பணிகளில் ஈடுபடுகின்றனர். இது இந்திய பொருளாதாரத்தை மேலும் பலவீனம் ஆக்குகிறது.

7. தொழிலாளர் ஊதியமும் வேலை இன்மைக்கு முக்கிய காரணமாக உள்ளது. சமீபத்தில் ஒரு ஆய்வு நிறுவனம் புதிய வேலை வாய்ப்புகள் உருவாக்க முடியாத நிலைக்கு தனியார் முதலீடு குறைவு மட்டுமின்றி தொழிலாளர் ஊதிய உயர்வும் ஒரு காரணமாக உள்ளதாக தெரிவித்துள்ளது. அரசின் தொழிலாளர் சட்டம் மற்றும் தொழிலாளர்களின் தேவை ஆகிய இரு இனங்களாலும் தற்போது ஊதியம் பன்மடங்கு அதிகரித்துள்ளது.

8. இதை தவிர எதிர்கால அரசு செலவுகள் இன்னும் அதிகரிக்க வாய்ப்புக்கள் உள்ளன என்பதை யாரும் மறுக்க இயலாது. இந்த மக்களவை தேர்தலில் யார் வென்றாலும் இந்த செலவு அதிகரிப்பு நிச்சயமான ஒன்றாகும். காங்கிரஸ் கட்சி அறிவித்த குறைந்த பட்ச ஊதிய திட்டத்துக்கு ரூ.3.6 லட்சம் கோடி செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது. பாஜக ஏற்கனவே விவசாயிகள் உதவி தொகையை பாஜக அறிவித்து முதல் தவணையை வழங்கி உள்ளது. இதை தவிர இரு கட்சிகளுமே விவசாயக் கடன் தள்ளுபடி என பல வாக்குறுதிகள் அளித்துள்ளன. இதனால் மத்திய அரசு மட்டுமின்றி மாநில அரசுகளும் பொருளாதார சிக்கலில் மாட்டிக் கொள்ள உள்ளன.