மும்பை: ஏப்ரல் 14ம் தேதிக்குப் பிறகு ஊரடங்கை விலக்கிக் கொள்வதா, வேண்டமா? என்ற முடிவு, மக்களின் நடவடிக்கைகளைப் பொறுத்தே அமையும் என்று தெரிவித்துள்ளார் மராட்டிய முதல்வர் உத்தவ் தாக்கரே.

அதாவது சமூக இடைவெளி உள்ளிட்ட கட்டுப்பாட்டு அம்சங்களை மக்கள் எந்தளவிற்கு கடைபிடிக்கிறார்கள் என்பதைப் பொறுத்தே முடிவுகள் அமையும் என்றுள்ளார் அவர்.

மத்திய அரசு அறிவித்துள்ள ஊரடங்கு வரும் ஏப்ரல் 14ம் தேதியோடு முடிவுக்கு வருகிறது. எனவே, “அரசின் வழிகாட்டுதல்களுக்கு மக்கள் எந்தளவிற்கு செவிசாய்க்கிறார்கள்” என்பது கவனத்தில் எடுத்துக்கொள்ளப்படும்” என்றுள்ளார் உத்தவ் தாக்கரே.

மராட்டிய மாநில சுகாதாரத்துறை அமைச்சர் ராஜேஷ் தோப் கூறும்போது, “குறிப்பிட்டப் பகுதிகளில் ஏப்ரல் 14ம் தேதிக்குப் பிறகு ஊரடங்கைத் தளர்த்துவது குறித்து அரசு உத்தேசித்து வருகிறது” என்றுள்ளார்.