சென்னை:

மிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் 2 கட்டங்களாக நடைபெறும் என மாநில தேர்தல் ஆணையர் பழனிச்சாமி அறிவித்து உள்ளார்.

அதன்படி தமிழகத்தில் டிசம்பர் 27, 30ந்தேதி ஆகிய இரண்டு நாட்களில் இரு கட்டங்களாக தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறும் என்றும், வாக்கு எண்ணிக்கை  2020ம் ஆண்டு ஜனவரி 2ந்தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

தமிழகத்தில் மேயர், நகராட்சி தலைவர், பேரூராட்சி தலைவர், ஊராட்சி தலைவர் உள்பட 1.50 லட்சம் உள்ளாட்சி பதவிகள் உள்ளன. உள்ளாட்சி அமைப்புகளுக்கு 2016 முதல் தேர்தல் நடத்தப்படவில்லை. மக்கள் பிரதிநிதிகள் இல்லாததால் உள்ளாட்சி அமைப்புகளை நிர்வகிக்க சிறப்பு அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டு நிர்வகிக்கப்பட்டு வருகின்றனர்.

அதேநேரத்தில் தேர்தலை தடுத்து நிறுத்தும் வகையில் தி.மு.க. உள்பட சில தரப்பில் உச்சநீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்றத்தில் அடுத்தடுத்து வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இதனால் உள்ளாட்சி தேர்தல் நடக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

இந்த நிலையிலும், ஏற்கனவே உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியபடி, தேர்தல் அறிவிப்பை வெளியிட மாநில தேர்தல் ஆணையம் இன்று வெளியிட்டு உள்ளது.