கொச்சி: 2023ம் ஆண்டுக்கான ஐபிஎல் போட்டிகளுக்கான வீரர்களை தேர்வு செய்யும் ஏலம் டிசம்பர் 23ந்தேதி தொடங்குகிறது. இந்த நிலையில், ஐபிஎல் ஏலத்தில், இதுவரை இல்லாத அளவுக்கு ஜம்மு காஷ்மீர் மாநிலத்தைச் சேர்ந்த வீரர்கள் அதிக அளவில் இடம்பெற்றுள்ளது தெரிய வந்துள்ளது.

ஐபிஎல் 2023 போட்டிக்கான ஐபிஎல்  வீரர்களின் ஏலம் டிசம்பர் 23 அன்று கொச்சி போல்காட்டி தீவில்  நடைபெறவுள்ளது. அங்குள்ள  ஸ்டார் ஓட்டலான கிராண்ட் ஹயாட்டின் 2 தளங்களை பிசிசிஐ ஐபிஎல் ஏலத்திற்காக பதிவு செய்துள்ளது. போல்காட்டி தீவில் உள்ள கிராண்ட் ஹயாட்டின் இரண்டு தளங்களை பிசிசிஐ முன்பதிவு செய்துள்ளது. மினி-ஆக்ஷன் 7 மணி நேர விவகாரமாக இருக்கும் என தகவல் வெளியாகி உள்ளது.  டிசம்பர் 23 ஆம் தேதி இடைவேளையில் ஒரு மணி நேர இடைவேளை இருக்கும். ஏல நாளுக்கு முன், ஐபிஎல் நிர்வாகக் குழு உறுப்பினர்களை டிசம்பர் 21 ஆம் தேதி உரிமையாளர்கள் சந்திப்பு நடைபெறும் என்றும்,  இதில், வீரர்கள் கிடைப்பது குறித்து உரிமையாளர்கள் சில தெளிவுகளைப் பெறுவார்கள். மற்றொரு கூட்டங்கள் டிசம்பர் 22 அன்று ஒளிபரப்பாளர்களுடன் போலி ஏலம் நடத்தப்படும் எனவும்  அறிவிக்கப்பட்டு உள்ளது. இதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.

இதற்கிடையில்,  ஒவ்வொரு அணியும் தாங்கள் தக்கவைத்துள்ள வீரர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளன. அதுபோல,  ஐபிஎல் 2023 போட்டிக்கான வீரர்கள் ஏலத்தில் பங்கேற்கும் வீரர்களின் பட்டியலை பிசிசிஐ வெளியிட்டுள்ளது.

ஐபிஎல் போட்டியில் பங்கேற்க இதுவரை  991 வீரர்கள் பதிவு செய்தார்கள். அவர்களில் அணிகளின் விருப்பத்துக்கேற்ப தற்போது 405 வீரர்கள் ஏலத்துக்காகத் தேர்வு செய்யப்பட்டு உள்ளார்கள். அவர்களில் 273 இந்திய வீரர்கள், 132 வெளிநாட்டு வீரர்கள். இவர்களில் 119 வீரர்கள் சர்வதேச ஆட்டங்களில் விளையாடியவர்கள். இந்த 405 வீரர்களில் இருந்து அதிகபட்சமாக 30 வெளிநாட்டு வீரர்கள் உள்பட 87 வீரர்கள் ஏலம் வழியாகத் தேர்வு செய்யப்படுவார்கள்.  கடந்த  ஐபிஎல் 2022 போட்டியில் 14 தமிழக வீரர்கள் விளையாடினார்கள். இம்முறை ஏலத்தில் 16 தமிழக வீரர்கள் பங்கேற்கிறார்கள்.

இதுதொடர்பாக பிசிசிஐ வெளியிட்டுள்ள பட்டியலில் இந்திய மாநிலங்களில் ஜம்மு – காஷ்மீர் அணி வீரர்கள் அதிக எண்ணிக்கையில் ஏலத்தில் இடம்பெற்றுள்ளது தெரிய வந்துள்ளது.

ஐபிஎல் 2023 ஏலத்தில் 21 ஜம்மு – காஷ்மீர் வீரர்களும் தமிழ்நாடு, கர்நாடகம், உத்தரப் பிரதேசம், டெல்லி மாநிலங்கள் சார்பாக தலா 16 வீரர்களும் ஏலத்தில் இடம்பெற்றுள்ளார்கள்.

மாநில கிரிக்கெட் சங்கங்கள் வாரியாக ஐபிஎல் 2023  ஏலம் போட்டியில் பங்கேற்க உள்ள வீரர்கள் எண்ணிக்கை

ஜம்மு – காஷ்மீர் மாநிலத்தில் இருந்து 21வீரர்கள் இடம் பெற்றுள்ளனர். இது பெரிய சாதனையாகவும், பெருமையாகவும் கருதப்படுகிறது.

தமிழ்நாடு, கர்நாடகம், உத்தரப் பிரதேசம் தாநிலங்களில் இருந்து தலா 16  வீரர்கள் இடம் பெற்றுள்ளனர்.

டெல்லி மாநிலத்தில் இருந்து  15 வீரர்களும், பஞ்சாபிலிருந்து  13 வீரர்களும்,  ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்து 12வீரர்களும். அரியானா, மகாராஷ்டிராவில் இருந்த தலா 11 வீரர்களும், மேற்குவங்கத்தில் இருந்து 11 வீரர்களும், கேரளா, ஆந்திரா, பரோடோ மாநிலங்களில் இருந்த தலா 10 பேரும்,  ஜார்க்கண்ட் 9,  இமாச்சல பிரதேசம், சட்டீஸ்கர் தலா  8 ‘வீரர்களும்,  விதர்பாவிலிருந்து 7பேரும், செளராஷ்டிரம், குஜராத், ஹைதராபாத்தில் இருந்து தலா  5வீரர்களும்,  உத்தரகண்ட்டில் இருந்து  4பேரும், பீஹார், மத்தியப் பிரதேசம், மஹாராஷ்டிரம் பகுதிகளில் இருந்து தலா  3 பேரும், ரயில்வே, சண்டிகர், கோவாவில் இருந்து தலா  2பேரும்,  ஒடிஷா, திரிபுரா, நாகலாந்து, அருணாசலப் பிரதேசம், புதுச்சேரி, அஸ்ஸாம் மாநிலங்களில் இருந்து தலா ஒருவரும்  பங்கேற்றுள்ளனர்.